சமையலறையில் உள்ள அப்பச்சோடாவை பயன்படுத்தி தொப்பையை குறைப்பது எப்படி..?


நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் பல பயன்பாடுகள் காணப்படுகின்றன ஆனால் நாம் அனைத்தையும் நாம் அறிந்திருப்பதில்லை அதேபோல ஒன்று தான் அப்பச்சோடா.

அப்பச்சோடாவை சரியான முறையில் பயன்படுத்த தெரிந்திருப்பின் நம் உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களை தவிர்த்து கொள்ளலாம்.

அப்பச்சோடாவை பயன்படுத்தி உடல் வடிவமைப்பை மாற்ற கூடிய சில செய்முறைகள் உண்டு இன்று உங்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்த போகின்றோம்.

தேசிக்காய் சாறுடன் கலந்த அப்பச்சோடா

தேவையான பொருட்கள்

 ஒரு தேக்கரண்டி அப்பச்சோடா

 தேசிக்காய் அல்லது திராட்சைப்பழம்

 அரைகுவளை தண்ணீர்

அரைகுவளை தண்ணீருக்குள் அப்பசோடாவை இட்டு அது கரையும் வரை காத்திருக்கவும் அதன் பிறகு தேசிக்காய் சாறை விட்டு நன்றாக கலக்கவும் உங்கள் காலை உணவை உட்கொள்ள 20 நிமிடம் இருக்கும் போது இந்த பானத்தை வெறும் வயிற்றோடு அருந்தவும்


அப்பிள் சாறு வினாகிரியுடன் கலந்த அப்பச்சோடா

தேவையான பொருட்கள்

 இரண்டு தேக்கரண்டி அப்பிள் சாறு வினாகிரி

 அரை தேக்கரண்டி அப்பச்சோடா

 ஒரு குவளை தண்ணீர்

மேலே பார்த்ததை போலவே அனைத்தையும் ஒரு குவளையில் போட்டு காலை உணவின் முன்னர் அருந்தவும்.

பழங்களுடன் கலந்த அப்பச்சோடா

தேவையான பொருட்கள்

 இரண்டு குவளை தண்ணீர்

 ஒரு கிண்ணம் ஸ்ரோபரிஸ்

 இரண்டு தேசிக்காய்

 சில புதிய புதினா இலைகள்

 ஒரு தேக்கரண்டி அப்பச்சோடா

இதுவும் மேலே பார்த்ததை போல தான் அனைத்தையும் ஒன்றாக கலந்து அத்துடன் இந்த பானத்துடன் சீனி சேர்க்க வேண்டாம் மேலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு தடவை அருந்த வேண்டும்.

குறிப்பு: மேலே நாம் பார்த்த இந்த பானங்கள் உடலின் கொழுப்பை குறைக்க உதவுகிறது அத்துடன் உணவு கட்டுபாட்டுடன் கோதுமை மா, சீனி என்பவற்றை உங்கள் உணவுகளில் சேர்ப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

அத்துடன் உடல் பயிற்சியும் செய்து வந்தால் சிறப்பான முடிவுகளை பெறலாம்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!