செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.
செர்ரி பழம் அனைவருக்கும் பிடித்தமானது. புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். ஆழமான சிவப்பு நிறத்தை உடையது. செர்ரிகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை இழப்பிற்கு ஏற்றது.
மேலும் வைட்டமின் சி, ஏ மற்றும் கே போன்றவைகள் காணப்படுகிறது. பொட்டாசியம், மெக்னீசியம் கால்சியம், பீட்டா கரோட்டீன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளையும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.
இதிலுள்ள வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பொட்டாசியம் தசைகளின் சுருக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும், ரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது.
செர்ரிகளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் காணப்படுகின்றன. இவை உயிரணுக்களுக்கு ஏற்படும் அன்றாட சேதத்தை சமாளிக்க உதவுகிறது.
மேலும் செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.
செர்ரி பழங்களை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். செர்ரி பழத்தில் வைட்டமின் ‘ஈ’ நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.
கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து, கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலம் பேண விரும்புபவர்கள் செர்ரி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.
தலைமுடி உதிர்வு, இளநரை, பொடுகு போன்ற பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதில் செர்ரி பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும், செர்ரி பழங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!