கொரோனா நிதியில் அழகு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு நடந்தது என்ன…?

கொரோனா நிவாரண நிதியில் கடன் வாங்கி அழகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு மூன்றரை வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் மியாமியை சேர்ந்தவர் டேனிலா ரெண்டன் (31) ரியல் எஸ்டேட் புரோக்கராக உள்ளார். கொரோனா பாதிப்பு காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கொரோனா நிவாரண நிதியில் மொத்தம் 316 ஆயிரம் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3.34 கோடியை கடனாக பெற்று உள்ளார்.

இதில், சுவாரசியமான விஷயம் என்னவென்றால் டேனிலா இந்த பணத்தை தனது தொழிலை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தவில்லை, மாறாக தனது அழகு அறுவை சிகிச்சைகள் மற்றும் அலங்காரம், சொகுசு பென்ட்லி கார் வாங்க பயன்படுத்தி உள்ளார். மேலும் தனக்கென ஒரு சொகுசு வீட்டையும் வாங்கி உள்ளார்.

இந்நிலையில், அவர் மீது பணமோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும்,வெளியே வந்த பிறகு ரூ.1 கோடியே 65 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ரெண்டன் மூன்று குழந்தைகளின் தாய் ஆவார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!