பத்தே நாட்களில் 7 கிலோ எடையை குறைக்க செய்யும் வெள்ளரிக்காய் டயட்…. எப்படி தெரியுமா..?


வெள்ளரிக்காய் என்பது பல்வேறு விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்கள் அடங்கிய மரக்கறி வகை ஒன்றாகும். இவற்றில் பைபர், மக்னீசியம், இரும்புச்சத்து, கல்சியம், விட்டமின்சி, ஈ மற்றும் பி என்பன அடங்கியுள்ளன.

உடல் எடை அதிகரித்து விட்டதே என கவலைப்படும் பலர் இதனை ஆகாரமாக உட்கொள்வதன் மூலம் உடல் எடை குறையும் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுசரி, வெள்ளரிக்காய் எப்படி உடல் எடையைக் குறைக்கும் எனக் கேட்கின்றீர்களா? வெறும் பத்தே நாட்களில் 7 கி.கிராம் எடையை இந்த வெள்ளரிக்காய் குறைக்கின்றது. இதற்கு கடைபிடிக்க வேண்டிய உணவு முறைமை பின்வருமாறு!

01. காலை உணவு
– வேகவைத்த முட்டை இரண்டு
– ஒரு கோப்பை வெள்ளரிக்காய் சலட்

02. ஸ்னெக்
5 பிளம்ஸ் அல்லது 1 ஆப்பிள் அல்லது 1 பீச்பழம் (200 கிராமை விட குறைவு)
03. பகல் உணவு
ஒரு துண்டு கோதுமை பாண் மற்றும் ஒரு கோப்பை வெள்ளரிக்காய் சலட்

வெள்ளரிக்காய் சலட்டை எவ்வாறு தயாரிப்பது?


தேவையான பொருட்கள்
– 400 கிராம் வெள்ளரிக்காய்
– 200 மிலீபால் அல்லது யோகட்
– உப்பு சிறிதளவு
– ஒரு வெங்காயம்

தேவையான பொருட்கள்
மரக்கறிகளை முதலில் சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் உப்பை கலந்து கொள்ளவும். அடுத்தபடியாக யோகட்டை கலந்து கொள்ளுங்கள். கடைசியாக வெங்காயத்தை கலந்து கொள்ளுங்கள்.

04. ஸ்னெக்
– வெள்ளரிக்காய் ஷேக்

வெள்ளரிக்காய்ஷேக்செய்வதுஎப்படி?

தேவையான பொருட்கள்
– ஒரு வெள்ளரிக்காய்
– ஒரு ஆப்பிள்
– ஒரு பிடி பசளைக்கீரை
– இஞ்சி

செய்முறை
மேற்குறித்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை கிளாஸ் ஒன்றில் ஊற்றி பரிமாறலாம்.

05. இரவு உணவு
– உங்களுக்கு பிடித்தமான பழவகை (300 கிராம்)
இந்த உணவு முறைமையை கடைபிடித்தால் உடல் எடை சட்டெனக் குறைவடையும் பாருங்களேன். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!