முதுகில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்குவது எப்படி…? வாரத்தில் 3 முறை இத செய்யுங்க..!


எமது உடலில் கெட்ட கொழுப்பு சேரும் பட்சத்தில் உடலின் ஒவ்வொரு பகுதிகளில் அதிகளவு தசை பெருக்க ஆரம்பித்து விடும். உதாரணமாக முதுகுப் பகுதி, கீழ் முதுகுப் பகுதி மற்றும் அக்குள் பகுதியை அண்மித்த கீழ்பகுதி என்பவற்றில் அதிக தசை காணப்படும்.

இது பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருப்பதுடன் பெண்கள் வெளியே செல்லவும் கூச்சப்படுவார்கள். இதிலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

பின்வரும் உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு 5 தொடக்கம் 8 பவுண்ட் எடை கொண்ட இரண்டுடம் பெல்ஸ் தேவை. வாரத்திற்கு மூன்று முறை இந்த உடற்பயிற்சிகளை செய்தல் வேண்டும்.

01. புஷ; அன்ட்டச்

– முதலில் நேராக நின்று இரண்டு கைகளையும் தோலின் உயரத்திற்கு தூக்கவும். இதன் போது உள்ளங்கை நிலத்தைப் பார்த்தவாறு இருத்தல் வேண்டும்.

– பின்னர் கைகளை இறக்கி விட வேண்டும்.

– அடுத்ததாக கைகள் இரண்டையும் தலைக்கு மேலாக உயர்த்த வேண்டும்.

– பின்னர் இரண்டு கைகளையும் தோலின் உயரத்துக்கு கொண்டு வர வேண்டும். அதன் பின்னர் மெதுவாக இரண்டு கைகளையும் கீழே இறக்க வேண்டும்.

02. பென்ட்ஓவர்சர்க்யூலர்ரோ

– நேராக நின்று கொண்டு உங்கள் முழங்கால்களை மெதுவாக மடிக்கவும்.

– பின்னர் இடுப்பை தரை நோக்கி வளைக்கவும்


– அப்படியே இருந்து கொண்டு கைகளை தரை நோக்கி நீட்டவும்.

– பின்னர் கைகளை வட்டமாக சுற்றவும். இடதுபுறம் ஆரம்பித்து வலது புறமாக நிறுத்தவும்.

– இதே போல் மற்றைய பக்கமும் செய்யவும்.

03. கிறிஸ்குறொஸ்ரிவரிஸ்ப்ளை

– முழங்கால்களை மெதுவாக மடித்து இடுப்பை 45 பாகைக்கு முன்னோக்கி கொண்டு செல்லவும்

– இவ்வாறு செய்யும் போது கைகளை கால் நோக்கி குறுக்காக வைக்கவும்.

– பின்னர் கைகளை மெதுவாக தோல் வரை தூக்கி பின்னர் ஆரம்பநிலைக்கு வரவும்.

04. எல்போகிஸ்

– கைகளை தோல் அளவிற்கு உயர்த்தவும். இதன் போது உள்ளங்கை வானத்தை பார்த்தவாறு இருக்க வேண்டும்.

– பின்னர் உங்கள் முழங்கால்களை 90 டிகிரிக்கு மடக்கவும்

– இந்த நிலையில் இருந்தவாறே இரண்டு கைகளையும் அருகில் கொண்டு வரவும். தோற்பட்டை அசையக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேற்குறிப்பிட்ட பயிற்சி முறைகளை தொடர்ந்து செய்துவர, தேவையற்ற கொழுப்பு நீங்கி முதுகுப்புறம் அழகடையும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!