கேரளாவிற்கு ரூ.700 கோடி தாரதா சொன்னமா..? ஐக்கிய அரபு அமீரகம் அந்தர் பல்டி..!


கேரளாவுக்கு எவ்வளவு தொகை நிதி வழங்குவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஐக்கிய அரபு அமீரக தூதர் தெரிவித்துள்ளார்.

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி வழங்க இருப்பதாக அம்மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் அண்மையில் தெரிவித்து இருந்தார். ஆனால் மத்திய அரசு இந்த நிதி உதவியை ஏற்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகின. வெளிநாட்டு நிதி உதவியை மத்திய அரசு ஏற்க மறுப்பதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சியான என்.டி.டிவி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா கூறும்போது, ‘‘கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மறு சீரமைப்பு பணிக்கு தேவையான உதவிகள் வழங்குவதற்காக குழு அமைத்துள்ளோம். எனினும் கேரளாவுக்கு குறிப்பிட்ட அளவு நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’’ என்றார்.

ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவியை வழங்குவதாக தற்போது வரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று மத்திய அரசும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!