குடலின் நச்சுத் தன்மை, கழிவுகளை எலுமிச்சப் பழ கலவையால் நீக்குவது எப்படி?


குடலின் ஆரோக்கியத்தில் அதிகலவு அக்கறை காட்டுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதிகளவான கழுவுகள் குடலில் சேர்வதனால் உடல் எடை அதிகரிப்பதுடன் ஒவ்வாமை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுவதை தடுக்க முடியாது.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும், சமிபாட்டு பிரச்சினைகளும் சரியான நேரத்தில் குணப்படுத்த வில்லையென்றால் குடலில் கழுவுகள் தேங்கும் வாய்ப்புக்கள் அதிகமாகும். இதனால் உடலில் நச்சுத் தன்மை அதிகமாவதுடன் பல நோய்களும் ஏர்படுகின்றன.

ஆனால் இலகுவான இந்த இயற்கை முறையில் குடலின் கழிவுகளை அகற்ற முடியும்.

நச்சுத் தன்மையை விரட்டும் எலுமிச்சப் பழ கலவை.

தேவையானவை:
• ஆப்பிள் சாறு – ஒரு கப்.
• எலுமிச்சப் பழச் சாறு – 2 மேசைக் கரண்டி.
• இஞ்சிச் சாறு – 1 மேசைக் கரண்டி.
• உப்பு – ½ தேக்கரண்டி.
• சூடான நீர் – ஒரு கப்.


செய்முறை:
சுத்தமான நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் கொதித்த பின்பு வெப்பத்தைக் குறைத்து அதில் சிறிதளவு உப்பு, இஞ்சி, எலுமிச்சப் பழச் சாறு, ஆப்பிள் சாறு போன்றவற்றை கலந்து நன்றாக கலக்கவும்.

தினமும் காலை உணவிற்கு முன் ஒரு கோப்பை பானத்தை அருந்துவதனால் சிறந்த பலன் கிடைக்கும்.

எலுமிச்சப் பழம், ஆப்பிளில் அதிகலவான ஆண்டிஒக்ஸிடன், விட்டமின், கனியுப்புக்கள் இருப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடலில் உள்ள நச்சுத் தன்மையை இலகுவாக விரட்டுகிறது. அத்துடன் அதிகளவு நீரையும் பருகுவதனால் சிறந்த தீர்வைப் பெற முடியும்.- – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!