விரைவில் பறக்க தயாராகுங்கள்… விற்பனைக்கு வரும் அதி நவீன பறக்கும் கார்…!


அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன பறக்கும் கார் விரைவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் ஓபனர். இந்த நிறுவனம் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட நேர பயணங்களை நீக்க சிறிய ரக பறக்கும் கார்களை தயாரித்து வருகிறது.

தரையில் மட்டுமின்றி வானத்திலும் பறந்து செல்லக்கூடிய காரை உருவாக்கும் பணியில் இந்நிறுவனம் கடந்த சில வருடங்களாக ஈடுப்பட்டு வருகிறது.

அந்த வகையில், உருவாகி உள்ள பறக்கும் கார் தான் “ப்ளாக்பிளை”. இந்த சிறிய ரக காரின் முக்கிய அம்சங்களை பற்றி பேசிய ஓபனர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்கஸ் லெங்,

“ப்ளாக்பிளை மணிக்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க கூடிய சிறிய ரக கார். இந்த காரில் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும். மின்சாரத்தில் இயங்கும் இந்த காரின் பேட்டரி அரைமணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த காரை இயக்க பைலட் லைசன்ஸ் தேவையில்லை. எங்கள் நிறுவனம் அளிக்கும் பயிற்சி மட்டுமே போதுமானது.” என்றார்.

சாதாரன காரின் விலையே லட்ச கணக்கில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் , இந்த அதிநவீன பறக்கும் காரின் விலை சொகுசு கார்களான எஸ்யுவியின் விலையில் தான் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!