இதில் ஒரு டம்ளர் மதிய சாப்பாட்டிற்கு பதிலா குடிச்சாலே போதும்.. உடல் எடை வேகமா குறையும்!!


உடல் எடையைக் குறைக்க சிறந்த வழிகளுள் ஒன்று, உடலுக்கு ஏற்ற டயட்டைப் பின்பற்றுவது தான். மற்றொன்று திரவ உணவுகளின் மூலம் எடையைக் குறைப்பது. அதில் இதுவரை எந்த ஜூஸ் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று பார்த்தோம்.
இப்போது ஸ்மூத்திகளின் மூலம் எப்படி உடல் எடையைக் குறைப்பது என்று பார்க்கப் போகிறோம். இங்கு உடல் எடையைக் குறைக்க உணவுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் சில ஸ்மூத்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றை மதிய வேளையில் குடித்து வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும். இதன் மூலம் உடல் எடையை மிகவும் வேகமாக குறைக்க முடியும்.


தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 2 கப்
பழங்கள் – 2 கப் (உங்களுக்கு பிடித்தது)
உலர் பழங்கள் – 1/4 கப்
நட்ஸ் – 1/4 கப்
பசலைக்கீரை – 1 கப்

செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, பின் அதனை மதிய வேளையில் உணவிற்கு பதிலாக குடித்து வர வேண்டும்.


தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை – 1 கையளவு
கேல் – 1 கையளவு
பேரிக்காய் – 1/2
வாழைப்பழம் – 1
குளிர்ந்த பாதாம் பால் – 1 1/2 கப்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:
கேல் கீரையின் இலைகளை பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் பசலைக்கீரை மற்றும் பாதாம் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் வாழைப்பழம், தேன் மற்றும் பேரிக்காய் சேர்த்து நன்கு அரைத்து குடிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:
கெட்டி தயிர் – 1/4 கப்
ப்ளூபெர்ரி – 1/4 கப்
கிரான் பெர்ரி – 1/4 கப்
ஸ்ட்ராபெர்ரி – 1/4 கப்
வாழைப்பழம் – 1/2
பசலைக்கீரை – 1 கையளவு
தண்ணீர் – சிறிது
ஐஸ்கட்டிகள் – சிறிது

செய்முறை:
முதலில் ஐஸ்கட்டிகளைத் தவிர, அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொண்டு, பின் அத்துடன் ஐஸ்கட்டிகளை சேர்த்து பருக வேண்டும். இந்த ஸ்மூத்தி மதிய வேளையில் மட்டுமின்றி, உடற்பயிற்சி செய்த பின் பருகுவதற்கும் ஏற்றது.

தேவையான பொருட்கள்:
கொக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வாழைப்பழம் – 1
கெட்டி தயிர் – 1/4 கப்
பட்டைத் தூள் – 1/2 டீஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – சிறிது

செய்முறை:
முதலில் மிக்ஸியில் வேர்க்கடலை வெண்ணெய், கொக்கோ பவுடர், கெட்டி தயிர் மற்றும் ஐஸ்கட்டிகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதன் மேல் பட்டைத் தூளை தூவி பருக வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படுவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
அவகேடோ/வெண்ணெய் பழம் – 1/2
கேல் – 1/2 கப்
கெட்டி தயிர் – 1/2 கப்
வென்னிலா பாதாம் பால் – 1/2 கப்
மாம்பழம் – 1/2 கப்
தேன் – 2 டீஸ்பூன்

செய்முறை:
முதலில் அவகேடோ, கேல், த்யிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் பாதாம் பால், மாம்பழம், தேன் சேர்த்து நன்கு அடித்து, சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்து குடிக்கவும்.

தேவையான பொருட்கள்:
ப்ளூபெர்ரி – 1 1/2 கப்
ராஸ்ப்பெர்ரி – 1/3 கப்
ப்ளாக்பெர்ரி – 1/3 கப்
வேர்க்கடலை வெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
பால் – 1 கப்

செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒன்றாக அடித்து குடிக்கவும். இந்த ஸ்மூத்தியை குடித்து வருவதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காது மற்றும் உடல் நன்கு சுறுசுறுப்புடனும் இருக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!