உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற… காலையில் எழுந்ததும் இத மட்டும் செய்ய மறக்காதீங்க..!


காலையில் எழுந்தவுடன் சூடாகதேநீர் அல்லது ஒரு கோப்பை காப்பி குடிப்பதென்பது நம் அனைவருக்கும் பழக்கமானதே. இருப்பினும் இந்த பழக்கம் சுகாதாரமானது அல்ல.
சிறுவர் முதல் பெரியோர் வரை சுகாதாரமாக இருக்கவேண்டுமெனில், அதற்கு சிறந்த வழிதே நீர் மற்றும் கோப்பி ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்த்து, சுட்டாறிய தண்ணீர் பருகுவதே ஆகும்.

காலையில் எழுந்தவுடனேயே தண்ணீர் பருகுவதென்பது ஆரம்பத்தில் சற்று கடினம்தான். சிலருக்கு தண்ணீர் பருகியவுடன் வாந்தி வருவதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் ஒரு கிழமை தொடர்ந்து இவ்வாறு செய்து வருவதன் மூலம் அவ்வாறு ஏற்படுவது நின்று விடும்.

காலையிலேயே தண்ணீர் பருகுவதன் மூலம் அப்படி என்ன நிகழ்ந்து விடும் எனக் கேட்கின்றீர்களா?

01. சமிபாடடைவது துரிதப்படுத்தப்படும்
காலையிலேயே தண்ணீர் பருகுவதன் மூலம் உடம்பில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கூறுகள் அகற்றப்படும். அத்துடன் நாம் உண்ணும் உணவுகள் இலகுவில் சமிபாடடைவதற்கு அது உறுதுணையாக இருக்கும்.

02. மலச்சிக்கல் தீர்க்கபபடும்
மலச்சிக்கல் இருப்பின் காலையிலேயே தண்ணீர் பருகுவதன் மூலம் அது கட்டுக்கு கொண்டு வரப்பட்டு அந்தப் பிரச்சினை தீர்க்கப்படும்.


03. வலி நிவாரணியாக செயற்படும்
தலைவலி, மாதவிடாயினால் ஏற்படும் வயிறுவலி போன்றவற்றிற்கு சூடான தண்ணீரை பருகுவதன் மூலம் அந்த வலியைக் குறைக்கலாம். தசைப்பிடிப்பால் அடிக்கடி அவதியுறுவோருக்கும் இதன் மூலம் தீர்வு காணலாம்.

04. எடையைகுறைக்கஉதவும்
கொதித்தாறிய தண்ணீரை காலையில் பருகுவதன் மூலம்உடல்வெப்பநிலைஅதிகரிக்கும். இதன் மூலம் வளர்சிதை மாற்றவிகிதம் அதிகரிக்கப்பட்டு உடல் எடை குறைவடையும்.

05. இரத்த ஓட்டம் சீராக்கப்படும்
இளஞ்சூடான தண்ணீரை பருகுவதன் மூலம், உடம்பில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கூறுகள் வெளியேற்றப்பட்டு கொழுப்புக்களும் கரையத் தொடங்கும். இதன் மூலம் இரத்தஓட்டம் சீராகும்.

06. வயதாவது தாமதப்படுத்தப்படும்
தண்ணீர் பகுவதன் மூலம் உடம்பில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த கூறுகள் அப்புறப்படுத்தப்படும். இதன் மூலம் வயதாவது தாமதப்படுத்தப்படும். அது மட்டுமின்றி உடம்பில் உள்ள செல்களும் புதுப்பிக்கப்படும். © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!