ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கும் கலோரிகள் குறைந்த உணவுகள் பற்றி தெரியுமா?


அதிகமான உடல் எடையினால் இதயச் செயலிழப்பு, இருதய நோய்கள் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

உடலிற்கு நன்மை தரும் கொழுப்புகள், சர்க்கரை. மாப்பொருட்கள் குறைந்தன் அளவில் உள்ள உணவுகளை தேர்ந்தெடுப்பதில் பலருக்கு சந்தேகங்கள் உள்ளன.

சரியான கலோரிகள் நிறைந்த உணவைதேர்ந்தெடுப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கலோரிகள் குறைந்த உணவையே உணவுப்பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கலோரிகள் குறைந்த உணவு பசியை போக்குவதுடன் உடல் எடையையும் குறைக்கின்றது.
உடல் எடையைக் குறைக்கும் கலோரிகள் குறைந்த உணவு.

1. சாலாட்.

சாலட்டில் குறைந்தளவு கலோரி இருப்பதனால் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. கீரை, காலே, புரோக்கோலி, தக்காளி மற்றும் ஒலிவினால் தயாரிக்கப்படும்.

சாலட்டில் விட்டமின் சி, ஆண்டிஒக்ஸிடன் அதிகம் காணப்படுகின்றது. பச்சை காய்வகைகளை உட்கொள்ளும் போது அவித்து சாப்பிடுவது சிறந்தது.

2. ஆப்பிள்.

ஆப்பிளில் பெக்ரின் இருப்பதனால் நீண்ட நேரத்திற்கு பசியை ஏற்படுத்தாது. இதில் உள்ள நார்ப் பொருட்கள் வேகமாக வயிற்றை நிரப்பி விடும்.

இதனை ஓட்ஸ் உணவுடன் அல்லது பழங்களின் சாலட்டில் சேர்த்து உட்கொள்ளலாம். அத்துடன் இனிப்பு சுவைக்காக Sandwich உடன் சேர்த்தும் சாப்பிட முடியும்.

3. ஸ்ட்ராபரி.

ஸ்ட்ராபரி குறைந்த கலோரியுடன் விட்டமின் சி, ஆண்டிஒக்ஸிடன் காணப்படுகிறது. ஒரு கப் ஸ்ட்ராபரி எடுத்து கொள்ளும் 50 கலோரிகள் குறைவடையும்.

இதனை சாலட், பான வகை மற்றும் தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.

4. ஓட்ஸ் உணவு.

ஓட்ஸ் உணவில் அதிகளவு நார் பொருட்கள் இருப்பதுடன், இவை அதிகமான நீரை உறிஞ்சவும் செய்கின்றது. இது பசியை குறைப்பதற்கு சிறந்த உணவு.

அத்துடன் கலோரி குறைவாக இருப்பதனால் உடல் எடையைக் குறைப்பதற்கு சிறந்த காலை உணவாக பயன்படுத்த முடியும்.

5. முட்டை.

100 கிராம் முட்டையில் 52 கலோரிகளுடன் புரோட்டினும் அதிகம் காணப்படுகின்றது. காலை உணவில் அவித்த முட்டை அல்லது பொரித்த முட்டையை சேர்த்து கொள்ளலாம்.

பொரித்த முட்டையில் 80 கலோரிகள் மட்டுமே உள்ளன. முட்டைக் கருவில் புரோட்டின் அதிகம் உள்ளதால் அதனை சாப்பிடுவது அவசியமானது.

6. உருளைக் கிழங்கு.

உருளைக்கிழங்கில் அதிக மாப்பொருட்கள் உள்ளன. அத்துடன் விட்டமின் காணப்படுவதுடன் பசியை தவிர்க்க உருளைகிழங்கு சிறந்த உணவாக பயன்படுத்த முடியும்.

உருளைக்கிழங்கை அவித்து அல்லது தோலுடன் பொரித்து சுவையான சிற்றூண்டியாக சாப்பிட முடியும்.

7. சிக்கன்.
சிக்கன் நெஞ்சுப்பகுதி கலோரிகள் குறைவானது ந்ன்பது உங்களுக்கு தெரியுமா? 100 கிராம் சிக்கன் நெஞ்சு பகுதியில் 100 கலோரிகள் மட்டுமே உள்ளன.

அத்துடன் சிக்கன் சமிபாடு அடைவதற்கு நிறைய சக்தி தேவைப்படுகிறது எனவே உடலில் உள்ள அதிகளவான கலோரிகள் கரைந்து விடுகின்றன.

8. ராஜ்மா.

ராஜ்மாவில் புரோட்டின், நார்ப் பொருட்கள், மற்று குறைந்த கலோரிகள் உள்ள ஆரோக்கியமான உணவு. அரை கப் ராஜ்மாவில் 100 கலோரிகளுடன் மாப்பொருட்களும் இருப்பதனால் உடலில் சக்தி அளவை நிலையாக வைத்திருக்க உதவுகின்றது.

9. காளான்.

இறைச்சிக்கு சிறந்த மாற்று உணவாக காளானை பயன்படுத்துகின்றோம். அத்துடன் 100 கிராம் காளானில் 25 கலோரிகள் மட்டுமே உள்ளது. மேலும் இதில் உள்ள சிங், பொட்டாசியம் உடலின் பல செயற்பாட்டை சீராக்க உதவுகின்றது.

10. முட்டைக்கோசு வகை காய்கள்.

புரோக்கோலி,ம் காலிஃபிளவர், முட்டைக்கோசு போன்ற காய்களில் அதிகளவான நார்ப் பொருட்கள் அதிகம் உள்ளதனால் வயிற்றை நிரப்பி விடும். இதில் புரோட்டின் அளவும் அதிகம் காணப்படிகின்றது.
இந்த காய் வகைகளில் சக்தி அளவு குறைவாக இருப்பதனால் இவை உடல் எடைக்கு சிறந்த உணவு.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!