ஒரே இரவில் கொழுப்பை கரையச் செய்து ஈரலை சுத்தப்படுத்தும் இயற்கையான பானம்..!


ஈரலின் பங்களிப்பு உடலிற்கு முக்கியமானது. இது இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதற்கும், கொழுப்பு உணவுகளை சமிபாடடையச் செய்வதற்கும், மெட்டபோலிக் செயற்பாட்டிற்கும் அவசியமானது.

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களாலும், சுற்றியுள்ள சூழலின் நச்சுத் தன்மையாலும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுகின்றது, இதனால் ஈரலின் செயற்பாடு குறைவடைகின்றன.

ஈரலின் சிறப்பான செயற்பாட்டிற்கு, உடலில் இருந்து ஈரலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுகளை அகற்றுவது முக்கியமானது.

இதற்கு இயற்கையில் தயாரிக்கப்படும் பான வகை உதவுகின்றது. இந்தப் பானத்தினால் இயற்கையாகவே ஈரலை சுத்தப்படுத்துவதுடன் அதன் செயற்பாட்டையும் சீராக்குகின்றது.

இது கொழுப்பை கரையச் செய்து உடல் எடையை குறைக்கும் வல்லமை கொண்டது. ஈரலைச் சுத்தப்படுத்தும் இயற்கையான பானம்.

தேவையான சேர்மானங்கள்.

•பச்சை காலே இலைகள் -2

• புதினா இலை – ஒரு கையளவு.

• 2cm நீளமுள்ள இஞ்சித் துண்டு – 1

• தோல் நீக்கப்பட்ட ஆப்பிள் – 2

• உடன் பிழியப்பட்ட எலுமிச்சப்பழச் சாறு – 2

• நீர் – 300ml

செய்முறை:

ஆப்பிள், காலே இலை, இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி பிளண்டரில் போட்டு ஒரு கப் நீரைச் சேர்த்து அரைக்கவும்.

பின்பு புதினா, எலுமிச்சப்பழச்சாறு, மீதமுள்ள நீரை பிளண்டரில் போட்டு நன்றாக அரைத்து சுவையான பானத்தைப் பெற முடியும்.

இந்தப் பானத்தை தினமும் ஒரு தடவை குடிக்கவும், வெறும் வயிற்றில் குடிப்பது மேலும் சிறப்பானது. இதனை தயாரித்தவுடன் பயன்படுத்துவதே உடலின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு அருந்த வேண்டும், அத்துடன் கொழுப்பு உணவுகள், மதுபானத்தை குறைத்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் சிறப்பானது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!