ஸ்ரீலீக்ஸ் விஷயத்தில் வசமாக மாட்டிக் கொண்ட நடிகர் – பிக்பாஸ் – 2 வில் நடக்க போகும் கூத்து..!


பிக்பாஸ் 2 இன்னும் சில நாட்அகலில் தமிழில் தொடங்க உள்ளது. இதே வேளையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் தொடங்கி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது

தெலுங்கு பிட்பாஸ் 2 நிகழ்ச்சியில், சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டியும் கலந்துக்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடுவே, பாதியில் களம் இறங்க உள்ளார் ஸ்ரீ ரெட்டி..

இது ஒரு பெரியப் விஷயம் அல்ல….ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகர்களின் உறவினர்கள் என அனைவரும் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என தெரிவித்து, ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் ஆபாச படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த பட்டியலில் நானியின் பெயரும் அடிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நானி ஒரு பெண்ணின் வாழ்கையை சீரழித்து விட்டார் என அவரை பற்றி தெரிவித்து இருந்தார்.

நானி நடத்தும் தெலுங்கு பிக்பாஸ்


தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நானி தான் தொகுத்து வழங்கி வருகிறார்..கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில், தொகுப்பாளரான நானி மீண்டும் ஸ்ரீ ரெட்டி மூலம் சர்ச்சையை சந்தித்து வருகிறார்.இதனை தவிர்க்கும் விதமாகவும், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், தன்னைப்பற்றி எந்த ஆதாரமும் இல்லாமல்இப்படி குற்றம் சாட்டி உள்ளதால், தன்னிடம் ஸ்ரீ ரெட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என நடிகர் நானி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்

அதில், “எவ்வித ஆதாரமும் இல்லாமல் என் மீது குற்றம் சாட்டுவது தவறு…. இந்த செய்தியால் தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது என்றும், பட வாய்ப்பும் பாதிக்கிறது…எனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், ஸ்ரீ ரெட்டி நிகழ்ச்சியின் நடுவே உள்செல்ல இருப்பதால், பிக்பாஸ் நானி எப்படி ரியாக்ட் செய்யப்போகிறார்…? ஸ்ரீ ரெட்டியின் நடத்தை எப்படி இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பி உள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!