இரவில் தூங்கும் முன் இதனை அருந்தி காலையில் குறைந்த எடையுடன் எழுந்திருங்கள்..!


இன்று நாங்கள் உங்களுக்கு வழங்கவிருக்கும் உடல் எடை குறைப்பதற்கான கலவையான, தேன் மற்றும் இலவங்கபட்டையின் கலவையானது பல மருத்துவ குணங்களை சிறப்பாக தன்னகத்தே கொண்டுள்ளது.

இதய நோய்கள் , இரத்த அழுத்தம், வேலைப்பழு, பல்வலி, சில பொதுவான சரும நோய்கள் போன்றவற்றிற்கு தீர்வளிக்கும்.

இது நீர்ப்பீடன தொகுதியையும் சிறப்பாக இயங்க உதவுகிறது கொலஸ்ட்ரோல் அளவை குறைக்கும்.
இது இன்சுலின் அளவை உடலில் சரியாக பேணவும் உதவுகிறது.

இங்கு பலருக்கும் உள்ள ஒரு பிரச்சினை அதிக உடல் எடையாகும் ஆனால் இன்று நாம் அறிமுக படுத்தவிருக்கும் இந்த கலவையானது ஒரே இரவில் உங்கள் உடலில் உள்ள மேலதிக எடையினை முற்றாக குறைக்க உதவுகிறது.

இப்போது இந்த கலவையின் நன்மைகளை பார்க்கலாம்,


• தேனும் உடல் எடை குறைப்பும்
இயற்கையாகவே விட்டமின்களாகிய B2,B3,B5,B6 மற்றும் விட்டமின் C என்பனவும் மினரல்களும் காபோவைதரெட்டும் கொண்ட தேனில் பல நன்மைகள் உள்ளன.

உடலில் சக்தியின் அளவை அதிகரிக்க செய்யும் இது உடலின் கொழுப்பை கரைக்கும் செயற்பாட்டை செய்ய உதவுகிறது.

அத்துடன் பசியெடுக்கும் அளவினையும் இது குறைத்து விடுகிறது இவையனைத்தும் இயற்கையான கலப்படமற்ற தேனிலே தான் கிடைக்க முடியும்.


• இலவங்கபட்டையும் உடல் எடை குறைப்பும்
இலவங்கப்பட்டை உடல் எடை குறைப்பிற்கு உதவும் அடுத்த அதிசய பொருளாகும் உடலில் கொலஸ்ட்ரோலின் அளவை பேண உதவும்.

இது பசியெடுக்கும் தன்மையினை கட்டுபடுத்துவதன் மூலம் இரத்தத்தில் சீனியின் அளவை பேணுவதோடு சமிபாட்டு தொகுதியையும் சுத்தப்படுத்துகிறது.

இலங்கை இலவங்கப்பட்டையை பயன்படுத்துதல் மிகவும் சிறந்ததாகும்.

• தேனும் இலவங்கபட்டையும் உடல் எடை குறைப்பும்

தேனையும் இலவங்க பட்டையும் சேர்க்கும் போது நமக்கு கிடைக்கும் கலவையானது மிகவும் சிறப்பான பல மருத்துவ மாற்றங்களை உடலில் ஏற்படுத்தக்கூடியதொன்று ஆகும்.

குறிப்பாக இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப்படுத்துவதோடு பசியெடுக்கும் அளவில் தாக்கம் செலுத்தி உடல் எடையை குறைக்க பாரிய பங்காற்றுகிறது.


• தேன் இலவங்கப்பட்டை கலவை செய்யும் முறை

சேர்மானங்கள்

 200 மில்லிலிட்டர் தண்ணீர்

 ½ தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்

 1 தேக்கரண்டி தேன்

அறிவுறுத்தல்கள்

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதனுள் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து 3௦ நிமிடங்களுக்கு ஊற விடவும்.

நன்றாக ஆறிய பிறகு அதனுடன் தேன் சேர்த்து நன்றாக கலக்கி தூங்கும் முன் அருந்தவும். ஓரிரு வாரங்களுக்கு இதனை தொடர்ச்சியாக செய்து வரவும் நிச்சயமாக பெறுபேறுகளை உங்களால் காண முடியும்.

குறிப்பு- தண்ணீர் சூடு ஆறும் முன் தேனை ஒருபோதும் சேர்க்க வேண்டாம் வெப்பம் தேனிலுள்ள அனைத்து பதார்த்தங்களையும் அழித்து விடும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!