எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்..?


எலும்பு என்பது உடலின் மிக முக்கியத் திசுவாக குறிப்பிடப்படுகின்றது.

கல்சியம் மற்றும் பாஸ்பரஸால் உருவாக்கப்பட்டதே எலும்பு. நமது ஒவ்வொரு அசைவுகளுக்கும் எலும்புகளே முக்கிய காரணம். எலும்புகள் தான் நம் உடலின் உள்உறுப்புகளைக் காப்பாற்றுபவை.

இந்த எலும்புகளுக்கு குறிப்பிட்ட அளவு சுமை அவசியம். அப்போது தான் அவற்றின் தன்மை மாறாமலிருக்கும். எனவே தான் உடற்பயிற்சி வலியுறுத்தப்படுகிறது. உடற்பயிற்சி என்றதும் எடை தூக்க வேண்டும், உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் அர்த்தமில்லை.

சாதாரண நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி என்பவைகூட எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளப் போதுமானவை.

உடற்பயிற்சி செய்யும் போது நம் இதயத்துடிப்பு அதிகமாகும். அத்துடன் இரத்தத்தில் ஒக்சிஜன் விநியோகிக்கப்படுவது அதிகரிக்கும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.


எனினும் உடற்பயிற்சி செய்யும் போது நாம் சில விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும். அவை என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா?

01. உடற்பயிற்சி செய்யும் முன்பு வார்ம்அப் பயிற்சிகள் அவசியம். இதனால் சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்றவை தவிர்க்கப்படும்.

02. உடற்பயிற்சிகளை முடிக்கும் போது திடீரென நிறுத்தக் கூடாது. மெல்ல மெல்ல குறைத்து நிறுத்த வேண்டும்.

03. உடல் ஒத்துழைக்கிற அளவுக்கான பயிற்சிகளை மட்டும் செய்யவும்.


04. உடலை வருத்தும் வகையில் திருப்புவது மற்றும் முறுக்குவது போன்றவை தடுக்கப்பட வேண்டும்.

05. உடற்பயிற்சிகள் மேற்கொள்கின்றவர்கள் அதிகமான தண்ணீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகள் என்பவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

06. உடற்பயிற்சி செய்கின்ற போது சரியான காலணிகள் அணிந்து கொள்ள வேண்டும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!