இஞ்சியை இப்படி யூஸ் பண்ணினால் தலையிலுள்ள இந்த பிரச்சினைகள் பறந்து விடும்..!


இஞ்சியில் அதிகளவு மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளமை நாம் அறிந்ததே. எனினும், பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள தலைமுடி உதிர்தல் பிரச்சினைக்கு இஞ்சியை வைத்தே தீர்வு காணலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், தலையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் இந்த இஞ்சி தீர்வளிக்கின்றது. அவை என்னவென்பதை நாம் இப்போது விரிவாகப் பார்ப்போம்.

01. முடி வறட்சியடைதல்
இஞ்சி சாற்றில் எண்ணெய் சேர்த்து கலந்து தலை முடியில் தடவி 1 மணி நேரம் ஊறவைத்து, பின் ஷhம்பு போட்டு கழுவ வேண்டும். இதனால் அதிகப்படியான வறட்சியால் மென்மையின்றி இருக்கும் தலைமுடி மென்மையாகும்.


02. பொடுகுத் தொல்லை
இஞ்சிசாற்றில் உள்ள அன்டிபக்டீரியல் தன்மை, மண்டை ஓட்டில் சுரக்கும் எண்ணெயின் அளவைக் குறைக்கும் மற்றும் தொற்றுகளால் பொடுகு வருவதைப் போக்கும். அதற்கு இஞ்சிசாற்றால் மண்டை ஓட்டை மசாஜ் செய்ய வேண்டும்.

03. தலைமுடி உதிர்வு
தலைமுடி அதிகம் உதிர்ந்தால், சிறிது நேரம் மண்டை ஓட்டில் ஒரு இஞ்சி துண்டை நேரடியாக தேய்க்க வேண்டும். பின் 10-15 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், தலைமுடி உதிர்வது முற்றிலும் நின்று விடும்.


04. காயங்கள்
தலையில் பொடுகு இருக்கும் போது ஏற்படும் அரிப்பால், சிலருக்கு தலையில் காயங்களே ஏற்பட்டு விடும். இன்னும் சிலருக்கு மண்டை ஓட்டில் பருக்கள் வரும். இப் பிரச்சனைகளைப் போக்க இஞ்சி சாற்றினை மண்டை ஓட்டில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

05. தலைமுடி பொலிவிழத்தல்
இஞ்சி சாற்றில் சிறிது ஒலிவ்எண்ணெய் சேர்த்து, தலையில் தடவி குறைந்தது 1 மணிநேரம் ஊறவைத்து, பின் ஷhம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், தலைமுடியின் பொலிவு அதிகரிக்கும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!