ஓட்டப்பயிற்சிக்கு பின் இவற்றை எல்லாம் செய்ய கூடாது.. ஏன் தெரியுமா..?


உடற்பயிற்சி செய்வது எமது உடலுக்குச் சிறந்தது. அதிலும் ஓட்டப்பயிற்சி செய்வது எமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றது. ஆனால் ஓட்டப்பயிற்சி செய்த பின்னர் சிலவற்றை செய்வதை நாம் தவிர்க்க வேண்டும். அவை என்ன எனக் கேட்கின்றீர்களா?

01. போதிய நீர் அருந்தாமை
ஓட்டப்பயிற்சிக்கு முன்னர் மற்றும் பின்னர் தண்ணீர் அருந்துவது மிகவும் இன்றியமையாதது. இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதோடு, நீர்ச்சத்தையும் சீரான அளவில் பராமரிக்கும்.


02. அழுக்கு துணியுடனேயே இருப்பது
ஓட்டப்பயிற்சியால் வியர்வை அதிகம் வெளியேறியிருக்கும். அதனால் அந்த ஆடையுடனேயே நாள் முழுவதும் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அதில் உள்ள கிருமிகள் சருமத்தில் தொற்றுக்களை உண்டாக்கும்.

03. நீண்ட நேரம் அமர்வது
ஓட்டப்பயிற்சி செய்வதனால் உடலில் உள்ள சக்தி விரைவில் குறையும். ஆகவே பலர் உடலுக்கு ஓய்வு கொடுக்கிறேன் என்று நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார்கள். அவ்வாறு செய்வது தவறு. மாறாக, யோகா அல்லது தியானம் போன்ற லேசான பயிற்சிகளில் ஈடுபடுங்கள். இதனால் இழந்த சக்தியை மீண்டும் பெறலாம்.


04. ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது
ஓட்டப்பயிற்சிக்குப் பின் பிட்சா, பர்கர் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எடையைக் குறைக்க மேற்கொண்ட ஓட்டப்பயிற்சியே வீணாகிவிடும்.

05. அளவுக்கு அதிகமான வேலை
ஓட்டப்பயிற்சிக்கு பின்னர் கடுமையான வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

06. காலை உணவைத் தவிர்ப்பது
ஆரோக்கியமான காலை உணவு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருக்க உதவும். அத்தகைய காலை உணவை ஒருவர் தவிர்த்தால், அது அவர்களை பலவீனமாக்குவதோடு, சுறுசுறுப்பற்றவர்களாகவும் ஆக்கும். அதிலும் ஒருவர் காலையில் ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டு காலை உணவைத் தவிர்த்தால், அவர்களது உடலில் சக்தியின்றி நாள் முழுவதும் சோம்பேறியாக இருக்க நேரிடும்.– © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!