இரவில் தூக்கமின்மையால் தவிப்பவரா..? இத முதல்ல படிங்க..!


நிம்மதியான உறக்கம் என்பது எம் அனைவருக்கும் மிக அவசியமானதொன்றாகும். ஆனால் சிலருக்கு உறக்கம் என்பதே கிடையாது. அதனால் பெரிதளவில் அவஸ்தை படுவர். அப்படியான சந்தர்ப்பங்களில் பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு உதவிபுரியும்!

01. யோகா
உறங்குவதற்கு முன் சிறிது நேரம் யோகா செய்வதன் மூலம், நிம்மதியான தூக்கத்தை பெறலாம். யோகா செய்வதன் மூலம் உடல் ஓய்வு பெறும். இதனால் விரைவில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.


02. ஆரோக்கியமான டயட்
பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தைப் பெறலாம். அதிலும் வான் கோழி சாப்பிட்டால், அதிலுள்ள அதிகளவிலான ட்ரிப்டோஃபேன் ஒருவித மயக்க உணர்வை உண்டாக்கி, நம்மை விரைவில் தூங்க வைக்கும்.


03. புத்தகம் படித்தல்
இரவில் படுக்கையில் படுத்ததும் தூங்க வேண்டுமானால், படுக்கும் முன் சிறிது நேரம் புத்தகத்தைப் படியுங்கள்.


04. ஒரே நேரத்தில் உறங்குங்கள்
நாம் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உறங்கச் செல்வதை பழக்கமாகக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், செரடோனின் மற்றும் மெலடோனின் அளவை மூளை சரிசெய்து அதனை பழக்கப்படுத்திக் கொள்ளும். எனவே குறிப்பிட்ட நேரம் வந்ததும், தானாகவே உறங்கிவிடுவீர்கள்!

05. கருப்பு நிற திரைச்சீலைகள்
படுக்கை அறையில் உள்ள ஜன்னல்களின் வழியே வெளிச்சம் வந்தால், அங்கு கருப்பு நிற திரைச்சீலைகளை வாங்கி தொங்கவிடுங்கள். இதனால் அறை முழுவதும் இருட்டாக இருப்பதுடன், உடனே உறக்கமும் வந்துவிடும்.


06. வெதுவெதுப்பான பால்
உறங்கச் செல்வதற்கு முன், வெதுவெதுப்பான பாலை அருந்த வேண்டும். ஏனெனில், பாலானது ட்ரிப்டோபேன் அளவை சீராக்கி உடனடியாக உறக்கத்தை வரவழைக்கும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!