தூக்கியெறியும் மாம்பழத் தோலில் இவ்வளவு சத்துக்களா? இத முதல்ல படிங்க..!


மாம்பழம் என்பது மிகவும் சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த பழமாகும். இந்து சமயத்தில் கூட இந்த பழத்தை தொடர்பு படுத்தி பல்வேறு கதைகள் உள்ளன. இருப்பினும், மாம்பழத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் யாரும் அதன் தோலுக்கு கொடுப்பதில்லை.

மாம்பழத்தில் சத்துக்கள் நிறைந்துள்ளதைப் போல, அதன் தோலிலும் பல்வேறு சத்துக்கள் உண்டு என்பதை நீங்கள் கேள்வியுற்றுள்ளீர்களா? மாம்பழத் தோல் உண்பதற்கு உகந்ததல்ல என எம்மில் பலர் தவறாக நினைத்துக்கொண்டிருப்பதாலேயே அதன் தோலை முற்றாக புறக்கணித்து விடுகின்றார்கள்.

ஆனால் மாம்பழத் தோலில் விட்டமின் ஏ, விட்டமின் சீ, நார்ச் சத்து மற்றும் பைத்தோநியூட்ரியன்ட்ஸ் என்பன பொதிந்துள்ளன. இந்த மாம்பழத் தோலை உட்கொள்வதால் எமக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

01. விட்டமின் ஏ
மாம்பழத் தோலில் உள்ள விட்டமின் ஏ, சிறந்த கண்பார்வைக்கு உதவி புரிவதுடன் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.


02. விட்டமின் சீ
விட்டமின் சீயானது, உடம்பில் உள்ள காயங்களை குணப்படுத்துவதோடு இரும்புச் சத்தையும் தக்கவைத்துக் கொள்கின்றது. அத்துடன், புதிய தோலை உருவாக்குதல் மற்றும் பாதிக்கப்பட்ட தோலை சீராக்குதல் போன்ற தொழிலையும் செவ்வனே செய்கின்றது.

03. நார்ச்சத்து
மாம்பழத் தோலில் அதிகளவில் உள்ள நார்ச்சத்து, உண்ணும் உணவுகளை நன்கு சமிபாடடையச் செய்கின்றது. அத்துடன் குடல் சம்பந்தமான அனைத்து உபாதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது.

04. பைத்தோநியூட்ரியன்ட்ஸ்
பூச்சிகள் மற்றும் பங்கஸ்கள் போன்றவற்றிலிருந்து பழத்தை பாதுகாக்கும் வகையில் அதன் தோலில் உள்ள பைத்தோநியூட்ரியன்ட்ஸ்கள் செயற்படும். இவை மனித உடலில் சேரும் பட்சத்தில் கொலஸ்ரோலை குறைப்பதுடன் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கின்றது.


அது சரி, இந்த மாம்பழத்தோலை எவ்வாறு உட்கொள்வது? அதனை உணவுக்கு ஏற்றவாறு எவ்வாறு தயார் செய்வது போன்றவற்றை இப்போது நாம் பார்ப்போம்.

01. ஸ்மூத்தி
தோல் அகற்றப்படாத மாம்பழம் ஒன்றை எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் வேறு சிறு பழங்களையும் சேர்த்து அரைத்து ஸ்மூத்தி போல் செய்து கொள்ளலாம்.

02. பொரியல்
மாம்பழம் ஒன்றை எடுத்து, அதன் தோலை நன்கு சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அவற்றை சூரிய ஒளியில் அல்லது அவனில் வைத்து காயவைத்து பொரியல் போலாக்கி உண்ணவும்.

03. தோலுடன் சேர்த்து மாம்பழத்தை உண்ணுதல்
மாம்பழம் ஒன்றை எடுத்து, அதன் தோலை சீவாமலே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை அப்படியே சாப்பிடலாம்.
இனிமேல் மாம்பழத் தோலை சீவி சாப்பிடுவதை தவிர்த்து தோலில் உள்ள சத்துக்களையும் பெற்றிடுவோம்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!