இவற்றை எல்லாம் தினமும் செய்தால்.. நீங்க ஆசைப்பட்ட சிக்ஸ் பெக் உங்கள் வசம்!


இன்றைய இளைஞர்களின் கவனம் முழுவதும் எப்படி சிக்ஸ் பெக் உருவாக்கிக் கொள்வது என்பதே. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. வசீகரமாக இருக்க வேண்டும் எனும் ஆசை யாருக்குத் தான் இல்லை? சிலர் எவ்வளவு தான் உடல் நோக உடற்பயிற்சி செய்தாலும் அவர்கள் எதிர்பார்த்த சிக்ஸ் பெக் கிடைத்திருக்காது.

உடனே உடற்பயிற்சி மையத்தின் பயிற்றுவிப்பாளரை கடிந்துகொள்வார்கள். அது முற்றிலும் தவறான விடயம். உடற்பயிற்சி செய்தும் உங்கள் உடலில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லையா? அப்போது நீங்கள் உங்கள் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் அர்த்தம்.

உண்மையில் சிக்ஸ் பெக் வேண்டுமென்றால் உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து தசையைக் கூட்டுதலிலேயே நாம் அக்கறை செலுத்த வேண்டும். உடலில் உள்ள கொழுப்பு எவ்வளவு குறைவாக உள்ளதோ அதற்கு ஏற்றாற் போல் தசை வளர்ச்சி இருக்கும் என புகழ்பெற்ற பயிற்றுவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழுப்பைக் குறைத்து தசையைக் கூட்டுவதற்கு இவற்றை கட்டாயம் உட்கொள்ளுங்கள். நீங்கள் ஆசைப்பட்ட சிக்ஸ் பெக் உங்கள் வசம்!

01. புரோட்டின்
புரோட்டின் அதிகளவில் உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். சிக்கன் பிரெஸ்ட், மாட்டிறைச்சி மற்றும் மீன் போன்றவை சிறந்தது. புரோட்டின் உடலுக்குச் சேர்வதால் தேவையற்ற கொழுப்பு குறைக்கப்படுகின்றது. அத்துடன் நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் தசையை பெருக்குகின்றன.


02. விதைகள் மற்றும் தானியங்கள்
பாதாம், முந்திரிப் பருப்பு மற்றும் வால்நட்ஸ் எனப்படும் அக்ரூட் பருப்பு என்பன உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஒமேகா 3 போன்றவற்றை கொண்டன. இருப்பினும் இவைகளில் உயர் கலோரிகள் உள்ளமையால் ஒரு கைப்பிடி அளவு உட்கொள்வதென வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

03. யோகட்
யோகட்டில் உள்ள புரோபயோட்டிக், உணவு சமிபாடடைவதை சீராக்குவதுடன் வாயு வெளியேற்றம் மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்தல் போன்றவற்றிற்கு உதவி புரிகின்றது. யோகட்டில் கல்சியமும் அதிகளவில் காணப்படுவதால் அவை தேவையற்ற கொழுப்பை உடைத்தெறிந்து உடலை பாதுகாக்கின்றது. இதில் புரோட்டினும் அடங்கியுள்ளமை ஒரு போனஸ் என்றே கூறவெண்டும்.


04. பெர்ரி பழம்
பெர்ரியில் உள்ள நார்ச்சத்து மற்றும் அன்டிஒக்ஸிடன்ட்ஸ் பசியை கட்டுப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது.

05. கினோவா
கினோவாவில் புரோட்டின், நார்ச்சத்து, விட்டமின் பி மற்றும் காபோஹைதரேற்று என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை உட்கொள்வதால் வயிற்றில் கொழுப்பு தங்குவது குறைவடைந்து தசை விருத்தியும் ஏற்படும்.

06. கிறீன் டீ
சிக்ஸ் பெக்கிற்கு முயற்சிக்கும் பலர் தனது உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதிலேயே அதிக நேரம் செலவழிக்கின்றனர். அவர்களுக்கு இந்த கிறீன் டீ சிறந்தது. இதன் மூலம் கொழுப்பு குறைவடைகிறது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!