இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? அப்ப நிச்சயமா வயிற்றில் வளர்வது பெண் குழந்தை தான்!


பெண் குழந்தை பிறந்தால் வீட்டிற்கு மகா லட்சுமி வந்துவிட்டாள் என நம் முன்னோர்கள் கூறுவார்கள். பெண் என்றாலேயே காதுகுத்து, பூப்புனித நீராட்டு, கல்யாணம் மற்றும் வளைகாப்பு என கொண்டாட்டங்கள் அதிகரித்துக் கொண்டே போகும். இந்த பெண் குழந்தை வேண்டும் என தவமிருக்கும் தம்பதியர் மத்தியில் தமது வயிற்றில் வளர்வது பெண் குழந்தையா என்பதை கருவுற்றுள்ள தாய் ஒருவரும் கண்டறியும் காலம் இப்போது வந்துவிட்டது. ஆம், இந்த அறிகுறிகள் உண்டா என அவதானியுங்கள். ஆம் என்றால், உங்கள் வயிற்றில் பெண் பிள்ளை தான் வளர்கிறது என்று அர்த்தம்.

01. இதயத் துடிப்பு – உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பு வீதம் நிமிடத்திற்கு 140 – 160 துடிப்புகளை விட அதிகமாகக் காணப்படுமாயின் அது பெண் குழந்தையாக இருக்கலாம்.

02. வயிறு – தாயின் வயிறு எவ்வாறு உள்ளது என்பதை அவதானித்து கூட பிறக்கவிருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதை கணித்து விட முடியும். தாயின் வயிறு மேல் நோக்கி உயர்ந்திருந்தால் அது பெண் குழந்தையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

03. குமட்டல் – கருவுற்ற தாய்மார்களுக்கு குமட்டல் அதிகமாக இருக்கும். ஒரு தாய்க்கு குமட்டல் அதிகமாக உள்ளதாயின் வயிற்றில் வளரும் குழந்தை பெண்ணாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

04. முகப்பருக்கள் – தாயின் முகத்தில் முகப்பருக்கள் மற்றும் அரிப்புடன் கூடிய சிறிய கட்டிகள் தோலில் தோன்றுமாயின் அதை பெண் குழந்தை வயிற்றில் வளர்வதற்கான அறிகுறியாகக் கருதலாம்.


05. மனநிலை – கருவுற்ற தாய்க்கு எரிச்சல், மனஅழுத்தம் மற்றும் கோபம் என்பன ஏற்படுமாயின் அவருடைய வயிற்றில் பெண் குழந்தை வளர்கின்றது எனக் குறிப்பிடலாம்.

06. மார்பகங்களின் அளவு – கருவுற்ற தாயின் மார்பகங்களில் வளர்ச்சி ஏற்படும். குழந்தைக்கு போசாக்கை வழங்கத்தக்க வகையில் மார்பகங்கள் தயாராவதே இதற்குக் காரணம். அதிலும் வலது மார்பகத்தை விட இடது மார்பகம் சற்று பெருத்து காணப்படுமாயின் அது பெண் குழந்தை வயிற்றில் வளர்கிறது என்பதை உணர்த்தும்.

07. வெள்ளைப்பூடு பரிசோதனை – கருவுற்றுள்ள தாய் ஒருவர் வெள்ளைப்பூடு உட்கொண்ட போதும் அவரது உடலில் இருந்து வெளிபடும் வாசத்தில் ஒருவித மாற்றமும் இல்லையெனின், அவர் பெண் குழந்தைக்கு தாயாகப் போகின்றார் எனக் கூறலாம்.

08. வலது பக்கம் திரும்பிப் படுத்தல் – கருவுற்றுள்ள தாய் வலது பக்கம் திரும்பிப் படுத்து நித்திரை கொள்வாராயின் அவருக்கு பெண் குழந்தை பிறக்கப்போகின்றது எனக் கொள்ளலாம்.
09. குழந்தையின் தலை – குழந்தையின் அல்ட்ரா சவுண்ட்டில் குறுகிய தலை மற்றும் வட்டமான தாடை காணப்படுமாயின் அது பெண் குழந்தை என நம்பலாம்.

10. பேக்கிங் பவுடர் பரிசோதனை – கருவுற்ற தாயின் சிறுநீரை பேக்கிங் பவுடரில் இட்டு அவதானிக்கும் போது, அதில் எதுவித மாற்றமும் ஏற்படாதிருந்தால் அது பெண் குழந்தை பிறப்பதற்கான அறிகுறி என தெரிவிக்கப்பட்டுள்ளது.


11. தலைமுடி – தாயின் தலை முடி குறைவாகவும் சோர்வாகவும் காணப்படுமாயின் அவர் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை தான் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

12. சிறுநீரின் நிறம் – தாயின் சிறுநீர் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படுமாயின் இதனை பெண் குழந்தை வளர்வதற்கான அறிகுறியாக கருத முடியும்.

13. பசி – கருவுற்றிருக்கும் தாய் சொக்லேட் மற்றும் ஐஸ் கிறீம் போன்ற இனிப்பு சுவை கொண்ட உணவுகளை அதிகம் விரும்புவாராயின் வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது என அர்த்தம்.

14. மார்பக வளர்ச்சி – கருவுற்றுள்ள தாயின் மார்பகங்கள் துரிதமாக வளர்ச்சி பெறுமாயின் அவரின் வயிற்றில் பெண் குழந்தை வளர்கின்றது எனலாம்.

15. அழகிய தோற்றம் – கருவுற்றுள்ள தாய் தனது கர்ப்ப காலம் முழுவதும் அழகிய தோற்றத்துடன் காணப்படுவாராயின் அவர் பெண் குழந்தையை சுமக்கிறார் என்று பொருள்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!