ஆண்களே நெஞ்சுல புசுபுசுன்னு முடி வளரணுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…!


ஆண்களுக்கு வீரமும் புகழும் தான் அழகு என்றில்லை. மார்பில் புசுபுசுவென வளர்ந்திருக்கும் முடியும் தான் அழகு. அப்படி மார்பில் நிறைய முடி இருக்கும் ஆண்களைத் தான் பெண்களுக்கும் அதிகம் பிடிக்கிறது.

ஆனால் சில ஆண்களுக்கு மார்பில் பூனை முடி போல் சிறிதளவே இருக்கும். அவர்கள் மார்பில் முடி வளர என்னவெல்லாம் செய்யலாம்?

டெஸ்ட்ரஜோன் என்னும் ஹார்மோன் அளவு சீராக இருக்க வேண்டும். அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் உண்டாகும். அதனால் மருத்துவரிடம் தக்க ஆலோசனைகளைப் பெற்று, டெஸ்ட்ரஜோன் சப்லிமெண்ட் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.


இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு ஒருமுறை மார்பில் உள்ள முடியை ஷேவ் செய்யலாம். முடியை ஷேவ் செய்வதால் அடுத்து முடி வளரும்போது திக்காகவும் அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும்.

வெங்காயத்தை இரண்டாக வெட்டி, மார்பில் அந்த சாறை நன்கு அழுத்தித் தேய்த்தாலும் முடி வளரும்.

இதற்கெனவே நிறைய மசாஜ் ஆயில்கள் கடைகளில் கிடைக்கின்றன. ரோஸ்மெரி மற்றும் லாவண்டர் ஆயிலைக் கலந்து மசாஜ் செய்ய பயன்படுத்தலாம்.-
Source:tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!