வாயிலுள்ள சூயிங்கத்தை விழுங்கி விட்டால் உடலுக்கு ஆபத்தா..?


ஒருவேளை நீங்கள் வாயில் வைத்திருந்த சூயிங்கத்தை தெரியாமல் விழுங்கிவிட்டால் உடலுக்கு என்ன நடக்கும் என்று எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா?…

நம்முடைய சிறு வயதில் சூயிங்கத்தை விழுகிவிட்டால் அது வயிற்றுக்குள் ஒட்டிக்கொள்ளும் என்று பயமுறுத்துவார்கள். அதனாலேயே சூயிங்கத்தை விழுங்கிவிட்டால் அதை வீட்டிலும் சொல்லாமல் பயந்து கொண்டே தான் இருப்போம்.
சூயிங்கத்தை விழுங்கிவிட்டால் சாப்பிடும் உணவு செரிக்காது என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் சாப்பிடும் ஸ்வீட்னர்கள் மற்றும் ஃபிளேவர்கள் சேர்த்த சூயிங்கம் வயிற்றிலேயே செரித்துவிடும்.


சூயிங்கத்தில் இருக்கும் அந்த கம் போன்ற மூலப்பொருள் எளிதில் கரையாது. அது வயிற்றிலேயே ஒட்டிக்கொள்ளும் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. மற்ற உணவுகளைக் காட்டிலும் சூயிங்கம் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளுமே தவிர, அது வயிற்றுக்குள்ளேயே தங்காது.

வயிற்றுக்கோளாறு போன்ற சில உடல்நலக் கோளாறு உள்ளவர்கள் சூயிங்கம் சாப்பிட்டால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வயிற்றுவலி, வயிற்றுப்பிடிப்பு ஆகியவை உண்டாகும். அதனால் கொஞ்சம் கவனம் தேவை.


மற்றபடி, சூயிங்கம் சாப்பிடுவதால் தாடைப்பகுதியில் உள்ள எலும்பில் வலியுண்டாகும். அதனால் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

மற்றபடி, சூயிங்கம் சாப்பிட்டு விழுங்கிவிட்டால் நீங்கள் நினைக்கிற அளவுக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது.-Source:tamil.eenaduindia.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!