கெட்ட கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களைத் தூண்ட இந்த உணவுகளை சாப்பிடுங்க..!


உடல் எடை அதிகரிப்பிற்கும் ஹார்மோன் லெப்டின்க்கும் உள்ள தொடர்பு பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். லெப்டின் கொழுப்புக் கலங்களால் உருவான ஹார்மோன். இது உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்து விட்டதா? அல்லது குறைந்து விட்டதா என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது.

லெப்டின் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உள்ளெடுக்கும் கலோரியின் அளவு, உணவு உட்கொள்ளும் நேரங்கள், சூரிய வெளிச்சம், உடற்பயிற்சி, அழுத்தம், நித்திரை கொள்லும் எழுந்து கொள்ளும் நேரம் போன்றவையே.

லெப்டின் உடலின் இனப்பெருக்கத் தொகுதி, தையிரோயிட் சுரப்பி, அட்ரீனல் சுரப்பி, வளர்ச்சி ஹார்மோன் போன்றவற்றைச் சீராக்குவதற்கு உதவும்.

கொழுப்பைக் கரைக்கும் இந்த ஹார்மோனின் செயற்பாட்டைத் தூண்டச் செய்யும் உணவுகள் பற்றி பார்ப்போம்:

1. திராட்சைப் பழம்:
திராட்சை சிட்றஸ் வகை பழம். இது கொழுப்பைக் கரைக்க உதவுவதுடன், மெட்டபோலிசத்தை தூண்டும். அத்துடன் அதிகளவான விட்டமின் சி இருப்பதனால் சமிபாட்டை விரைவாக்குவதுடன், தூண்டச் செய்கிறது. சாப்பிடுவதற்கு முன் திராட்சைப் பழத்தை சாப்பிடுவதனாலோ அல்லது திராட்சையை பானமாக அருந்துவதனாலோ வயிற்றை திருப்தியடையச் செய்ய முடியும், இதனால் குறைந்த கலோரிகளைன் உட்கொள்வதனால் உடல் எடையைக் குறைக்க முடியும்.

2. முழு தாணியங்கள்.
முழு தாணியங்கள் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோனைத் தூண்டுவதுடன், இதில் உள்ள மாபொருள் மெட்டபோலிச செயற்பாட்டை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் இன்சுலீன் அளவை சீராக்க உதவுகிறது. நாட்டரிசி, கோதுமை, திணை போன்ற முழு தாணியங்களை உட்கொள்வதனால் கெட்ட கொழுப்பின் அளவு குறைவடைவதுடன், நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கச் செய்யும்.

புரோக்கோலி:
புரோக்கோலியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன் அளவை அதிகரிக்கச் செய்வதுடன், இதில் காணப்படும் விட்டமின் சி, கல்சியம் மற்றும் பல கனியுப்புக்கள் காரணமாக இதனை உணவில் சேர்த்துக் கொல்வது அவசியம். இதில் குறைந்தளவு கொழுப்பும், கலோரியும் இருப்பதுடன், அதிகளவான நார்ப் பொருட்கள் காணப்படுவதனால் விரைவாக எடையைக் குறைக்க உதவும்.

3. மீன்:
கொழுப்பு அதிகமுள்ள மீனில் ஒமேகா-3 காணப்படுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான லெப்டினைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் லெப்டின் அளவு அதிகரிப்பதனால் உடல் எடையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் உடல் எடையை சரியாக பேண முடியும்.

4. சிங்.
சிங் குறைபாடு ஏற்பட்டால் லெப்டின் அளவும் குறைவடையும். அதனால் சிங் அதிகமுள்ள கடலைகள், கடலுணவுகள், பூசனிக்காய் போன்றவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


5. பச்சை இலை வகைகள்:
பச்சை இலை வகைகளான கீரை, புரோக்கோலி, காலே போன்றவற்றில் கொழுப்புக்கள் காணப்படுவதில்லை, பதிலாக நார்ச்சத்துக்களே உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்பைக் கரைப்பதுடன், கொழுப்பைக் கரைக்குக் ஹார்மோனை செயற்படுத்தி விடுகிறது.

6. புரத உணவுகள்:
புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும் போது குறைந்தளவே உட்கொள்ள வேண்டி இருக்கும். இதனால் மெட்டபோலிசம் விரைவாக நடைபெறும். புரதம் அதிகம் உள்ள மீன், முட்டை, தயிர் போன்றவற்றை உட்கொள்வதனால் லெப்டின் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும்.

7. நல்ல கொழுப்புள்ள உணவுகள்:
கொழுப்பு உடலிற்கு தேவையான ஊட்டச்சத்தே. நல்ல கொழுப்பு உள்ள உணாவுகளான அவகோடா, தேங்காய் எண்ணெய், ஒலிவ் எண்ணெய், கடலை, விதைகள் போன்றவற்றை தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

8. கரட்
இதில் பீட்டா கரோட்டின், அண்டிஒக்ஸிடன் இருப்பதனால் மூளையில் லெப்டின் அளவைத் தூண்டுகிறது. இதில் மேலும் பல விட்டமின், கனியுப்புக்கள் அடங்கியுள்ளன.
இந்த உணவுகள் எல்லாம் பசியைக் கட்டுப்படுத்துவதுடன், உடல் எடை, சோர்வைக் குறைப்பது மட்டுமல்லாது, கொழுப்பின் அளவையும் குறைத்து விடுகிறது.
உடலால் லெப்டினை எவ்வாறு தூண்ட முடியும்?

• பகலில் அதிகளவான கொழுப்பு உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், லெப்டின் அளவை அதிகரிக்கச் செய்து விடும்.

• தூக்கமின்மையினால் லெப்டின் அளவு அதிகரிக்கும்.

• தினமும் 7-8 மணி நேரங்கள் ஒரே நேரத்தில் தூங்குவது மிகவும் அவசியமானது.

• மாபொருட்கள், சீனியின் உள்ளெடுக்கும் அளவைக் குறைத்தல்.

உணவு உட்கொள்ளும் முறையாக சரியாக பின்பற்றுதல் அவசியமானது. இதனால் பசி உணர்வை சீராக்க முடியும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!