நீங்களும் தலைமுடியைப் பராமரிக்கும் போது இந்த தவறை செய்கிறீர்களா?


முடியை பராமரிப்பது, அடர்த்தியான பளபளப்பான முடியினைப் பேணுதல், அதனை விதம் விதமாக அலங்கரித்து பேணுதல் என்றால் எல்லோருக்கும் சந்தோக்ஷம் தான். அதிலும் முடியின்ன் அழகை மற்றவர்கள் பாராட்டிப் பேசி விட்டால் போதும் அவர்களது சந்தோக்ஷம் இரட்டிப்பாகி விடும்.

ஆனால் பல முடியைப் பராமரிப்பதில் பல தவறுகளை அவர்களுக்கே தெரியாமல் செய்து விடுவார்கள். குறிப்பாக வேலைக்குச் செல்லும் அவசரத்தில் முடியை சரியாக உலர வைக்காமை பலரும் செய்யும் பெரும் தவறு. இதனால் முடி உடைவடைந்து பாதிப்படைகின்றது.

முதலில் நீங்கள் முடியைப் பராமரிப்பதில் செய்யும் தவறுகல் என்னவென்று புரிந்து கொண்டு அதனை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.

முடியை பராமரிக்கும் போது செய்யும் தவறுகள் சில:

1. சூடான நீரில் முடியைக் கழுவுவதல்.
உங்களுக்கு சூடான நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளதா? சூடான நீரில் குளிப்பதனால் சிலவேளைகளில் சிறந்த ஒரு உணர்வைப் பெற முடிந்தாலும், உங்களுக்கு தெரியாமலே முடிகள் பாதிப்படைய ஆரம்பித்து விடும்.

சூடான நீர் இயற்கையாக முடியில் உள்ள உட்டச்சத்துக்களும், எண்ணெய்த் தன்மையையும் நீக்கி விடும். அத்துடன் சம்போ பயன்படுத்தி பின்பு கண்டிஸ்னர் பயன்படுத்தி கழுவும் போது குளிரான நீரினால் கழுவுவதனால் மட்டுமே அதன் எண்ணெய்த் தன்மையையும் மென்மையையும் பேண முடியும்.

2. உலர்த்துவதற்கு சரியான துவாயை பயன்படுத்தாமை.
எவ்வாறு முடிக்கு ஏற்றவாறு சம்போ, கண்டிஸ்னர் தெரிவு செய்கின்றோமா, அதே போல் சரியான துவாயை தெரிவு செய்ய வேண்டும்.

உடலை உலர்த்துவதற்கு பயன்படுத்தும் துவாயை பயன்படுத்தி முடியை உலர்த்தும் பழக்கம் இருந்தால் அதனை முதலில் விட்டு விடுங்கள். ஏனெனில் இதனால் முடி பாதிப்படையும். மெனமையான துணிகளாலான துவாயை மட்டுமே முடிக்கு பயன்படுத்துவதௌப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.


3. அதிகமாக சம்போ பயன்படுத்தல்.
உங்கள் முடியை மேலும் உலர்வடையச் செய்யக் கூடிய சம்போக்களை பயன்படுத்துவதனால் தலைப் பகுதியில் உள்ள வேர்த் துவாரங்கல் அடைபட்டு முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய் விடுகிறது. இதனால் முடி பாதிப்படைகின்றன.

இதனால் உங்கள் முடியின் தன்மைக்கு ஏற்றவாறு சம்போக்களை தெரிவு செய்ய வேண்டியது அவசியம். உங்களுக்கு அது பற்றி சரியாக தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பயன்படுத்துங்கள்.

4. சரியான முறையில் தலைமுடி சீவாமை:
பல்ருக்கும் தலைமுடியை சரியாக சீவுவதற்கு தெரியாது என்றே கூறலாம். அவர்கள் முடிகளில் உள்ள முடிச்சுக்களை வேகமாகவும், அழுத்தம் கொடுத்து எடுப்பதனால், முடிகள் உடைந்து பாதிப்படையச் செய்கிறது.

முதலில் முடியின் சிக்குகளையும் முடிச்சுக்களையும் நீக்குவதற்கு தலையில் உள்ள முடிகளை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து மெதுவாக சீப்பினால் சீவி முடிச்சுகளை அகற்றுவதே மிகவும் சரியான முறையாகும்.

5. சரியான தலையணையை தேர்வு செய்யாமை:
சரியான் தலையணை தேர்வு செய்யவில்லை என்றால் முடி கொட்டுகிறதா? இதனை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது தான் உண்மை.

கடினமான தலையணைகள் பயன்படுத்துவதனால் இரவில் தூங்கும் போது திரும்பி திரும்பி படுக்கும் போது முடிகளில் சிக்குகளையும் முடிச்சுக்களையும் ஏற்படுத்தி விடும். மெனமையான தலையணைகள் பயன்படுத்துவதனால் தலைமுடி பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

6. முடியை எப்போதும் இறுக்கமாக கட்டுதல்.
வேலைகளிற்குச் செல்லுவதற்கு இலகுவாக எப்போதும் முடியை இறுக்கமாக பலரும் கட்டுவதை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். நீண்ட நேரம் இறுக்கி கட்டுவதனால் முடிக்கு சரியான சுவாசம் கிடைக்காமல் அவை பாதிப்படைய ஆரம்பித்து விடும்.
அதனால் எப்போதும் மென்மையான பாண்ட் வகைகளை பயன்படுத்தி சிறிது தளர்வாக முடியினைக் கட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!