இரத்தம் உறைவதை தடுக்க இவற்றை மறக்காம சாப்பிடுங்கள்..!


இரத்தம் உறைவது என்பது மிக முக்கியமான செயற்பாடு. ஒரு காயம் ஏற்பட்டு விட்டால் உடனடியாக இரத்தம் உறைவதனால் இரத்த இழப்பை தடுப்பதுடன், தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கவும் செய்கிறது. இதனால் காயம் விரைவாக குணமடைந்து விடும். ஆனால் இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைவு ஏற்பட்டால் இருதய நோய்ஜ, பக்கவாதம் போன்றன ஏற்படுகின்றன.

இன்று நாம் பார்க்க இருப்பது இயற்கையான உணவு வகைகளால் இரத்தம் உறௌவதை தடுப்பது எவ்வாறு என்பதே.

இரத்தம் உடலினுள் உறைவதற்கு, கருத்தடை வில்லைகளை உட்கொள்ளுதல், நீண்ட நேரம் தரையில் உட்கார்ந்து இருத்தல் அல்லது படுத்தல், சில மருந்துகளாலும், நோய்களாலும், இரத்த நரம்புகள் பாதிப்படைதல், பரம்பரை, உடற்பயிற்சியின்மை, அதிகமான உடல் எடை, வயதடைதல், கர்ப்பகாலம், புகைப் பிடித்தல், உயர் இரத்த அழுத்தம் போன்றவை காரணமாக அமைகின்றது.

இரத்தம் உறைந்து போவதை சில அறிகுறிகள் மூலம் இலகுவாக அறிந்து கொள்ளலாம். அவை: இதயத்தில் வலி, இருதயப் பகுதி பாரமாக இருத்தல், வியர்த்தல், பார்வையில் பிரச்சினை, பேசுவதில் கடினம், கூர்மையான நெஞ்சுவலி, திடீரென கால் கைகளில் வலி எடுத்தல்.

உடல் உட்பகுதியில் இரத்தம் உறைவதை தடுப்பதற்கு இந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்:

1. சாலிசைலிக்.
இரத்தம் உறைவதை தடுப்பதற்கு ஆஸ்பிறினை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். அதில் காணப்படும் சாலிசைலிக் இரத்தம் உறைவதை தடுக்கும். இந்த சாலிசைலிக் பல மூலிகைகளிலும் காணப்படுகின்றது. அவை: மிளகு, மஞ்சள், தைம், அதிமதுரம், இஞ்சி, புதினா போன்றவையே. அது மட்டுமல்லாது அன்னாசி, திராட்சை, ஒலிவ், பெரி, உலர்திராட்சை, ஒரேஞ், தக்காளி போன்ற பழங்களில் இருப்பதனால் அவற்றை உட்கொள்வது சிறந்தது.

2. ஒமேகா-3 கொழுப்பமிலம்.
பல நோய்களை குணப்படுத்தும் ஒமேகா-3 கொழுப்பமிலம் இரத்தம் உறைவதை இலகுவாக தடுக்கின்றது. இது காலே, மீன், ஆளி விதை, கனோலா எண்ணெய், சூரியகாந்தி விதை, கீரை மற்றும் சோள எண்ணேய்யில் அதிகமாக உள்ளது.

3. விட்டமின் ஈ.
விட்டமின் ஈ குருதிச் சிறுதட்டுக்களை தடுப்பதன் மூலம் இரத்தம் உறைவதை தடுக்கும். விட்டமின் ஈ அதிகமாக கீரை, புரோக்கோலி, கிவி, தக்காளி, மாம்பழம், அவகோடா போன்ற பலவற்றில் காணப்படுவதனால் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இரத்தம் உறைவதை தடுப்பதற்கான சில இயற்கை தீர்வுகள்.

1. உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுதல்.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதனால் இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு குறைவடைவதுடன் உடல் எடையஇயும் பேண முடியும். மேலும் இன்சுலீன் செயற்பாடு சீராக நடைபெறும். பச்சை காய் வகைகள், இலைவகைகள், முழு தாணியங்கள், பழங்கள், ஒமேகா-3 கொழுப்பமிலம் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2. சுறுசுறுப்பாக இருத்தல்.
உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதனால் இரத்தம் உறைவதை தடுக்க முடியும். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதுடன், நடத்தல், ஓடுதல் போன்றவற்றால் நமை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும்.

3. புகைப்பிடித்தலை தவிர்த்தல்.
புகைப்பிடிப்பதனால் இரத்தம் உறைவது அதிகமாகிறது. அதுமட்டுமல்லாது உடலின் எல்லா தொகுதிகளும் பாதிப்படைகின்றது. எனவே புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.

4. மருந்துகளை மாற்ருதல்.
கருத்தடை, இரத்த அழுத்தம், புற்றுநோய், ஹார்மோன் மருந்துகள் சிலவற்றால் இரத்த உறைவு ஏற்படுகின்றது. எனவே அந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் படி மாற்றுவது சிறந்தது.

5. எண்ணெய் வகைகள்:
உடலிற்கு அவசியமான ஹெலிசிறிசியம் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்வதனால் இரத்த நரம்புகளில் உள்ள அழற்சியை போக்கி அதனை சீராக்குவதுடன், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. .- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!