மாடியிலிருந்து மக்கள் மீது ரூ.18 லட்சத்தை வீசிய 24 வயது தர்ம பிரபு… எங்கு தெரியுமா..?


ஹாங்காங்கை சேர்ந்தவர் வாங் சிங் கிட். 24 வயதே நிரம்பி இருக்கும் இருக்கும் இவர் பல கோடிகளுக்கு அதிபர் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய இணைய வைரலான கிரிப்டோகரன்சி மூலம் இவர் பல கோடிகளை சம்பாதித்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் இவர் மக்கள் மீது பணத்தை வீசி எறிந்த சம்பவம் பெரிய வைரல் ஆகியுள்ளது.

வாங் சிங் கிட் கிரிப்டோகரன்சிகளில் செய்த முதலீடு மூலம் நிறைய கோடிகளை சம்பாதித்து உள்ளார் என்று கூறுகிறார்கள். அதேபோல் புதிய புதிய கிரிப்டோகரன்சிக்கு இவர் கொடுத்த விளம்பரங்கள் மூலம் நிறைய வருமானம் பெற்றார் என்றும் கூறுகிறார்கள். தற்போது இவரது வங்கி கணக்கில் சில கோடிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் இவர் நேற்று முதல்நாள் ஹாங்காங்கின் ஷாம் ஷு பேய் என்று பகுதியில் உள்ள மாடிக்கட்டிடம் ஒன்றில் ஏறிக்கொண்டு மக்கள் மீது பணத்தை தூக்கி வீசி எறிந்துள்ளார். இதனால் உடனே அந்த பகுதியில் பெரிய அளவில் கூட்டம் கூடியது. கீழே கூடிய மக்கள் அவர் தூக்கி எறிந்த பணத்தை சண்டையிட்டு எடுத்துக் கொண்டு இருந்தனர்.

மொத்தம் இவர் 18 லட்சம் ரூபாயை இப்படி வீசியதாக கூறுகிறார்கள். இது எல்லாம் கிரிப்டோகரன்சிகளை விளம்பரம் செய்ததன் மூலம் இவர் ஈட்டிய பணம் என்று கூறப்படுகிறது. இதை மக்கள் சண்டையிட்டு எடுத்து செல்லும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

இந்த நிலையில் அவர் இப்படி பணத்தை தூக்கி எறிந்த சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டார். தற்போது இவரை ஹாங்காங் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பொது அமைதியை கெடுத்ததாக இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

இவர் மக்களுக்கு உதவ வேண்டும் என்று இப்படி செய்ததாக கூறியுள்ளார். ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் என்று பணத்தை வீசியதாக கூறப்படுகிறது. நான் ஒரு ராபின் ஹுட் போல செயல்பட வேண்டும் என்று ஆசைப்பட்டு பணத்தை வீசி எறிந்தேன் என்று இவர் கூறியுள்ளார்.

அதே சமயம் இவர் மீது ஏற்கனவே சிலர் மோசடி புகார்கள் உள்ளது. இவர் கிரிப்டோகரன்சியை வைத்து மோசடி செய்ததாக கூறுகிறார்கள். நிறைய பணக்காரர்களை இவர்கள் இப்படி ஏமாற்றி இருக்கிறார் என்றும் இவர் மீது புகார் உள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!