உடலின் சக்கரை அளவை குறைக்க உதவும் கறீலா..!


கறீலா என்பது பாகற்காயின் இந்திய பெயராகும்.

பெரும்பாலானோர் இதன் கசப்பு சுவை காரணமாகவே இதனை உணவில் சேர்த்து கொள்ள விரும்புவதில்லை.

உண்மையில், இதனை தொடர்ச்சியாக உண்பதனால் குருதியானது சுத்தம் செய்யப்படுவதுடன் இதில் அடங்கியுள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை நிவர்த்தி செய்ய உதவும்.

கறீலா பழச்சாற்றுடன் தேனை சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன எனத் தெரியுமா??

இப் பழச்சாறு வலி நிவாரணியாகவும் உடலின் நிர்ப்பிடனத்தை அதிகரிக்க செய்யும்.


கறீலா எவ்வாறு உடலின் சக்கரை அளவை குறைக்க உதவுகிறது??

ஆராய்ச்சி முடிவின்படி, alpha glucosidase நொதிய தொழிற்பாட்டை குறைப்பதன் மூலம் சாப்பாட்டிற்குபின் துரித குளுக்கோஸ் மட்ட அதிகரிப்பை சீர் செய்ய உதவுகிறது.

உடலின் சக்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் பேணகறீலா ஐ எவ்வாறுபயன்படுத்துவீர்??
தினமும் காலையில் கறீலா பழச்சாறு அருந்துவது சிறந்த முறையாகும்.

சிலர் இதனை உலர்ந்த நிலையில் பொடியாக மாற்றி தேநீர் ஆக பயன்படுத்துவர்.
ஒரு நாளைக்கு இரு முறை அருந்துவது சிறந்தது.


கறீலா இலுள்ள மருத்துவ குணங்கள் என்ன எனத் தெரியுமா??
இதில் அடங்கியுள்ள கரட்டின்,மோமோர்சிடின் குருதியில் குளுக்கோஸ் மட்ட அதிகரிப்பிற்கு எதிராகத் தொழிற்படும். இதனால் உடலில் சக்கரை அளவை குறைக்க உதவும்.

அது மட்டுமல்லாது, இதன் வித்துக்களில் உள்ள polypeptide p ஆனது இன்சுலினை ஓத்த தொழிற்பாட்டை செய்வதன் மூலம் குளுக்கோஸ் மட்டத்தை குருதியில் நியம மட்டத்தில் பேணுவதற்கு உதவும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!