நாள்பட்ட மூட்டு வலி, மன அழுத்தத்தை தடுப்பதற்கான சில இயற்கை வழிகள்..!


மன அழுத்தம் பலருக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினை. இதற்கு காரணம் அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், சில நோய்களுமே. அதில் முக்கியமானது மூட்டு வலி.

உலகில் பத்தில் எட்டு பேர் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். இதனால் மன அழுத்தமும் வாதமும் ஏற்படுவது பலருக்கும் பொதுவானதே. குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிகமாக மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மன அழுத்தமும் ஏற்படும்.

சில ஆய்வுகளில் 14 வீதம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதற்கான காரணம் மூட்டு வலியே. எனவே மூட்டு வலி குறைவாக இருக்கும் போதே சிகிச்சை எடுத்துக் கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

மூட்டு வலியைக் குணப்படுத்து மன அழுத்தம் வராமல் தடுப்பதற்கான சில இயற்கை முறைகள்:

1. இஞ்சிச் சாறு:
வீட்டு சமையலறையில் தினமும் பயன்படுத்தும் இஞ்சியில் உள்ள பல மருத்துவ குணங்களால் இதனை பலவற்றிற்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். இஞ்சி வேரை அல்லது கிழங்கை பானமாக தயாரித்து பருகினால் இருமல் குணமடைவதுடன், மூட்டுவலியையும் குணப்படுத்தலாம்.

2. மூலிகை கிறீம்:
இஞ்சி, இலவங்கம், சீசம் எண்ணெய் போன்றவற்றில் தயாரிக்கப்படும் வலி நிவாரண ஆயுர்வேத கிறீம்களை பயன்படுத்துவதனால் வலியைக் குறைக்க முடியும்.


3. வில்லோ பட்டை(வெள்ளை அலரிச் செடி)
வில்லோ பட்டை எடுத்து பக்கவாதம் அல்லது மூட்டுவலி ஏற்படும் போது பயன்படுத்தினால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் இலகுவாக வலியைக் குறைத்து விடும்.

ஆனால் ஆஸ்பிறின் ஒவ்வாமை உள்ளவர்களும் இரத்தம் உறையாத் தன்மை கொண்டவர்களும் மருத்துவர் ஆலோசனை பெற்று இதனை பயன்படுத்துவது அவசியமானது.

4. குளிரான அல்லது சூடான சிகிச்சை:
ஜஸ்கட்டி அல்லது சூடான நீரினால் மூட்டுகளிற்கு ஒத்தடம் வழங்குவதனால் இலகுவாக மூட்டுவலி குறைவடைவதுடன் வீக்கமும் குறைவடையும்.

5. உடற்பயிற்சி:
மூட்டுக்களிற்கு ஏற்றவாறு தினமும் உடற்பயிற்சி செய்வதனால் வலியினைக் குறைப்பது மிகவும் எளிதானது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!