உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? காலையில் இதனை சாப்பிடுங்கள்!!


காலை உணவு என்பது மிகவும் அவசியமானது. அதனை உட்கொள்வதனால் நாள் முழுவதும் சக்தி கிடைக்கும். அது மட்டுமல்லாது காலை உணவு அதிகளவில் கொழுப்பை உடலில் தேங்க விடுவதில்லை.

பலரும் உடல் எடை குறைக்கும் போது காலை உணவை தவிர்ப்பார்கள். ஆனால் அது மிகவும் தவறான முடிவு. காலையில் உணவைத் தவிர்ப்பதனால் மதிய உணவிற்கு முன்பதாகவும், மதிய உணவின் போதும் அதிகளவாக உட்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்க தான் செய்கிறது.

காலை உணவை தவிர்ப்பதற்கு பதிலாக காய் வகைகள், பழங்கள், முழு தாணியங்கள் அடங்கிய உணாவுகளை அதிகம் உட்கொள்வது சிறந்தது.

உடல் எடையைப் பேணுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய காலை உணவுகள் சில:

1. ராஸ்பெரி மற்றும் சீயா விதை புட்டிங்:
ராஸ்பெரி மற்று சீயா விதைகளில் அதிகளவான் நார்ப் பொருட்கள் இருப்பதனால் உடல் எடை அதிகரிப்பதை தடுத்து எடையைக் குறைக்கின்றது. இதில் அதிகளவில் காணப்படும் அண்டிஒக்ஸிடன் விட்டமின்கள் உடலிற்கு சிறந்தது. அதே போல் இதில் உள்ள பீனோலிக் பொருள் புற்றுநோய்க் கலங்களை அழிக்கும் தன்மை உள்ளது.

2. ஓட்ஸ் உணவு:
ஓட்ஸ் இரு வழிகளில் உடல் எடையைக் குறைக்கின்றது. ஒன்று இதில் அதிகளவான் நார்ப் பொருட்கள் இருப்பதனால் நீண்ட நேரத்திற்கு பசியை ஏற்படுத்தாது. இரண்டாவது இது உடலில் உள்ள அதிகளவான கொழுப்பைக் கரைக்க உதவுகின்றது. அத்துடன் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக பேணுகிறது.

3. தயிர்:
தயிர் பாலில் உள்ள அணைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது. ஆனால் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாகவே காணப்படுகின்றது. இதில் அதிகளவான கல்சியம் இருப்பதனால் உடல் எடையை குறைப்பதற்கு தூண்டும்.

4. முட்டை:
முட்டையில் அதிகளவாக புரோட்டினும், நல்ல கொழுப்பும், பல விட்டமின்களும் உள்ளன. ஒரு பெரிய முட்டையில் 78 கலோரிகள் காணப்படும். இதனை தினமும் காலை உணவில் சேர்த்துக் கொள்வதனால் உடல் எடையை பேண முடியும்.

5. பிளக் பீன்ஸ்:
பிளக் பீன்ஸில் கரையக் கூடிய நார்ப் பொருட்கள் இருக்கின்றன. இது வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. மேலும் கரையும் நார்ப் பொருட்களை உட்கொள்வதனால் உடல் எடை விரைவாக குறைவடையும்.

6. நிலக்கடலை பட்டர்:
பதப்படுத்தப்பட்ட நிலக்கடலை பட்டரில் சீனி, உப்பு எண்ணெய் அதிகம் உள்ளது. அத்துடன் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதனால் ஆரோக்கியமான கொழுப்பு, மாப்பொருள், புரதம் உடலிற்குக் கிடைக்கின்றது.

7. பாதாம் பட்டர்:
பாதாம் பருப்பை சாப்பிடுவதனால் அதில் உள்ள நார்ப்பொருட்கள் நீண்ட நேரத்திற்கு பசியை ஏற்படுத்தாது. பாதாம் பட்டரில் கொழுப்பு, புரதம், அண்டிஒக்ஸிடன், நார்ப் பொருட்கள் காணப்படுவதனால் உடலிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அணைத்தும் கிடைத்து விடும்.

8. சல்மன் மீன்:
சல்மன் மீன் அதிகளவான புரோட்டினும், ஒமேகா-3 கொழுப்பமிலமும் காணப்படுவதனால் நாள் முழுவதும் உடலிற்குத் தேவையான சக்தி கிடைப்பதுடன், உடல் எடை குறைப்பதற்கும் உதவுகிறது. மேலும் இது நீரிழிவு நோய் ஏற்படாமலும் பாதுகாக்கும்.

9. சிக்கன் இதயத் துண்டு:
சிக்கன் இதயத் துண்டை சாப்பிடுவதனால் நீண்ட நேரம் பசியை ஏற்படுத்துவதில்லை. அதே நேரம் பல் மணி நேரங்களிற்கு உடலிற்குத் தேவையான சக்தியையும் வழங்குகின்றது. இதற்கு காரணம் இதில் காணப்படும் அதிகளவான புரோட்டினே.

10. பெரி:
பெரி பழம் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரும் அண்டிஒக்ஸிடன் மட்டும் அல்லாது விட்டமின் – சி, கே, நார்ப் பொருட்கள் என பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!