ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படவில்லை என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்..!


உண்ணும் உணவுகள் சரியான முறையில் உடலைச் சென்றடைவதனாலேயே உடலிற்கு சக்தி கிடைப்பதுடன், ஆரோக்கியமும் பேணப்படுகிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும் பாரிய பொறுப்பை சிறுகுடல் எடுத்துள்ளது. சிறுகுடலால் சரியான முறையில் ஊட்டச்சத்தை உறிஞ்சப்படாத நிலையில் மெட்டபோலிசச் செயற்பாடு பாதிக்கும்.

ஊட்டச்சத்துக்களான புரோட்டின், மாப்பொருள், கொழுப்பு, விட்டமின், கனியுப்புக்கள் போன்றவை சிறுசிறுதுணிக்கைகளாக மாற்றப்பட்டு உடலால் உறிஞ்சப்படுகிறது.

சிறுகுடலில் பாதிப்பு ஏற்படுதல், வீக்கம், தொற்றுக்கள் போன்றவற்றால் அதன் செயற்பாடுகள் பாதிப்படைவதுடன் அதற்காக மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகள் கூட மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மேலும் பல நோய்கள் வருவதற்கான ஆபத்துக்களும் உள்ளன.

ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படவில்லையென்பதை அறிந்து கொள்வது எப்படி?

1.நெஞ்சு படபடத்தல்.
போதியளவு இரும்புச் சத்துக் கிடைக்கத போது நெஞ்சுப் படபடப்பு ஏற்படுவதுடன் இதயத் துடிப்பு அதிகமாவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

2.சமிபாட்டுப் பிரச்சினை.
ஊட்டச்சத்துக்கள் போதியளவு இல்லாத போது சமிபாட்டுப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

3.நகங்கள் உடைதல்.
புரோட்டின் அளவு சரியாக கிடைக்காத போது நகங்கல் தானாகவே உடைய ஆரம்பித்து விடுகிறது.

4.மலத்தின் தன்மை மாற்றம்.
மலத்தின் தன்மையை வைத்துக் கொண்டே ஊட்டச்சத்து உறிஞ்சுவதில் உள்ள பிரச்சினையை கூற முடியும். வயிற்றோட்டம் ஏர்படுவதற்கு ஒரு காரணம் ஊட்டச்சத்து உறிஞ்சும் செயற்பாடு சரியாக நடக்கவில்லை என்பதே.


5.முடி உதிர்தல்.
ஊட்டச் சத்துக்கள் குறைவடைவதனால் முடிகள் உதிர்வதுடன் அவை உடையவும் செய்கின்றது.

6.வலிகள் ஏற்படுதல்.
விட்டமின் பி12 குறைவடைவதனால் உடலின் சில பகுதிகளில் வலிகல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

7.சோம்பல்.
மக்னீசியம், இரும்புச்சத்துக் குறைவடையும் போது சோம்பலும் தலைச் சுற்றும் ஏற்படுகிறது. இரும்புச் சத்து குறைபாட்டால் இரத்தசோகையும் சிலருக்கு ஏற்படுகிறது. அத்துடன் உடலின் சக்தி குறைவடைந்து சிறந்த மனநிலையை ஏற்படுத்தும்.

8.வாய்வு மற்றும் வீக்கம்.
ஊட்டச்சத்துக் குறைவாகக் காணப்படுவதனால் வாய்வுத் தொல்லையும் வீக்கமும் ஏற்படுகிறது. புரோட்டின் அளவு குறையும் போது கால்களில் பிடிப்புக்களும்,ஊட்டச்சத்து ஊட்டச்சத்து உறிஞ்சுவது குறைவடையும் போது வயிற்றுப் பகுதிகளில் பிடிப்புக்களும் ஏற்படுகிறது.

9.சரியான உணவு சேர்க்கை இல்லாமை.
கல்சியம் எடுத்துக் கொள்ளும் போது விட்டமின் டியும் எடுத்துக் கொள்வதனால் கல்சியம் இலகுவாக உடலால் உறிஞ்சப்படுகிறது. இதே போன்று சரியான உணவு சேர்க்கையை எடுத்துக் கொள்வது அவசியமானது.

10.மாதவிடாய்ப் பிரச்சினை.
சரியான அளவு ஊட்டச்சத்தும், கலோரியும் உடலிற்கு கிடைக்காத போது குறித்த கால இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுவதில் சிக்கல் ஏற்படும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!