அடிவயிற்று கொழுப்புக்களை கரைத்து தொப்பையை குறைக்க இப்படி செய்யுங்க..!


அடிவயிற்றில் மற்றும் வயிற்றுப் பகுதியில் தசை அதிகரித்தல் அல்லது தொப்பை போடுதல் என்பது ஆண்களைப் பார்க்கிலும் இப்போதெல்லாம் பெண்களை அதிகளவில் பாதித்துள்ளது எனலாம்.

வயிற்றில் கொழுப்பு தங்குவதே அதற்கான முக்கிய காரணம் ஆகும். எமது உடலை மீண்டும் வசீகரமானதாக மாற்ற வேண்டுமானால் அதற்கு இந்த தொப்பையை குறைக்க வேண்டும்.

தொப்பையை குறைப்பதற்கென அதிக பணம் செலவழிக்கத் தேவையில்லை. பின்வரும் முறையை பின்பற்றினால் போதும், தொப்பை காணாமல் போய் விடும்!

தேவையான பொருட்கள்
01. 1 கி.கதேசிக்காய்
02. பார்ஸ்லி
03. 3 லீட்டர்தண்ணீர்
04. பேக்கிங்சோடாஒருபை

செய்முறை
முதலில் தேசிக்காயை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கோப்பை ஒன்றை எடுத்து அதில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி அதில் தேசிக்காயை இடவும். அந்த நீரில் பேக்கிங் சோடாவையும் இட்டு அதனை ஒரு மணித்தியாலத்திற்கு வைத்திருக்கவும்.


பின்னர் பார்ஸ்லியை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதே போல் பேக்கிங் சோடாவில் இட்ட தேசிக்காயை எடுத்து அதனை தோலுடனேயே நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அவற்றை எடுத்து பாத்திரம் ஒன்றில் இடவும். பின்னர் அந்த பாத்திரத்தில் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள 3 லீட்டர் தண்ணீரை விட்டு அதனை மிதமான சூட்டில் 2 – 3 மணித்தியாலங்களுக்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அதனை வடி கட்டவும். இவ்வாறு செய்வதன் மூலம் 1.5 லீட்டர்கள் பெறப்படும். இந்தக் கலவையை 15 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

பிரென்டி அருந்தும் கிளாஸில் ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த கலவையை அருந்த வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் தொப்பை குறைவடையும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!