காலை உணவு உட்கொள்வதற்கு முன் இந்த பானத்தை குடித்தால் என்ன நன்மை தெரியுமா..?


வெள்ளைப் பூடு மற்றும் தேன் பற்றி நீங்கள் கேள்வியுற்றிருப்பீர்கள். இவை இரண்டும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டவை. இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து உண்ணும் பட்சத்தில் அது சொல்லொனா நன்மைகளைக் கொண்டு வரும் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அழற்சி, நாட்பட்ட நோய்கள், சமிபாட்டுப் பிரச்சினைகள், ஆத்தரைட்டிஸ், புற்றுநோய், நீரிழிவு மற்றும் தொற்று ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை வெள்ளைப் பூண்டிற்கு உண்டு. அதே போல் தேனில் உள்ள இரும்பு, பொட்டாசியம், ஸிங்க், மக்னீசியம் மற்றும் செலனியம் என்பன நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து உடலைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது.

இவை இரண்டையும் சேர்த்து உடலுக்கு நன்மை பயக்கும் விதத்தில் எவ்வாறு மாற்றுவது எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
01. ஒரு கோப்பை தேன்
02. பூண்டு 10
03. மூடி உடைய கண்ணாடி பாத்திரம்


செய்முறை
முதலில் பூண்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் கண்ணாடிப் பாத்திரத்தில் தேனை ஊற்றி அதில் பூண்டை இட வேண்டும். பின்னர் மூடியால் இறுக்க மூடி குறித்த பாத்திரத்தை ஒரு வாரத்திற்கு இருட்டறையில் வைக்க வேண்டும். இந்தக் கலவையின் ஒரு தேக்கரண்டியை காலை உணவு உட்கொள்வதற்கு முன்னதாக அருந்த வேண்டும். இதனை தண்ணீருடன் கலந்தும் பருகலாம்.

இவ்வாறு தொடர்ந்து ஒரு கிழமை செய்ய வேண்டும். அதன் பின்னர் சில வாரங்கள் இடைவெளி விட்டு மீண்டும் இதனை செய்ய ஆரம்பிக்கலாம்.

இந்தக் கலவையை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
01. இரத்த அழுத்தத்தை குறைக்கும்
02. அழற்சி ஏற்படுவதை குறைக்கும்
03. கொலஸ்ரோலை கட்டுப்படுத்தும்
04. நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்
05. தடுமல் தடுக்கப்படும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!