தினமும் பச்சையாக கேரட்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா….!!!


பூமிக்கு அடியிலிருந்து விளைந்து வரும் கேரட்டில் விட்டமின் எ, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகிய பல சத்துக்கள் காணப்படுகின்றன. இப்படி அனைத்து சத்துக்களையும் அடக்கியிருக்கும் இந்த கேரட்டை சாப்பிட்டால் என்ன அதிசயங்கள் உடம்பில் நடக்கும் என்பதனை பார்கலாம்.

1) கேரட் சாப்பிடுவதால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். எனவே, அதனை வேகவைத்து அதனுடன் முட்டை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

2) உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சைப் பழம் மற்றும் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

3) ஜீரணக் கோளாறுகள் மற்றும் உடல் எலும்புகள் உறுதியாக கேரட் உடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.


4) உணவில் அடிக்கடி கேரட்டை சேர்த்துக் கொள்வதனால், முதுமையில் ஏற்படும் கால்சியம் சத்துக் குறைபாடு, தலைமுடி உதிர்வு, எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

5) பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் உதிரப்போக்கு காரணமாக உடம்பில் விட்டமின் இழப்பு ஏற்படுகின்றது. இதனை சரிசெய்ய கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அத்துடன், பெண்களின் மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் பிரச்சைனைகளையும் கேரட் குணப்படுத்தும்.

6) கருவுற்றுள்ள பெண்கள் தினமும் கேரட் சாப்பிடுவதால் மலச்சிக்கல், ரத்தசோகை, தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவற்றை தடுக்கலாம்.


7) வாயு மற்ற வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை போக்க கேரட்டின் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைக் கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊறவைத்து மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் தீரும்.

8) கேரட் சாறுடன் பாதாம் பருப்புகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மஞ்சள் காமாலை நோயையும் இதன்மூலம் குணப்படுத்தலாம்.


9) கேரட் சாறை மதிய வேளையில் குடித்து வருவதனால் உடல் குளிர்ச்சி அடையும். அத்துடன், வரட்டு இருமல், சளி, வயிற்றில் பூச்சித் தொல்லை ஆகியவற்றிக்கு பூரணமாக தீர்வு தரும்.

10) தினமும் பச்சையாகவோ அல்லது ஜூஸாகவோ கேரட் சாப்பிட்டு வந்தால் அல்சர் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் நீங்குவதுடன் பற்களில் ஏற்படும் மஞ்சள் கறைகளும் மறைந்து போகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!