பெசல் லெஸ் டிஸ்ப்ளே கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்…!


சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சியோமியின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Mi 7 என்றும் இதன் சிறப்பம்சங்களும் சீன வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

அதன்படி புதிய Mi 7 ஸ்மார்ட்போனில் 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும் இது 2018-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. Mi 6 மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக உருவாகும் Mi 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் 6.0.1 இன்ச் பெசல்-லெஸ், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே மற்றும் 3D தொழில்நுட்பத்தில் முக அங்கீகார வசதியை வழங்கும் என கூறப்படுகிறது. நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் முன் இந்த தொழில்நுட்பம் முழுமையாக மேம்படுத்த சியோமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை Mi 7 ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் கைரேகை ஸ்கேனர் பின்புறம் வழங்கப்படும் என்று்ம இதன் விலை CNY 2.699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,448 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவிலேயே வழங்கப்படும் என கூறப்பட்டது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ள சியோமி ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைன் முறையில் ஸ்மார்ட போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டு நாடு முழுக்க வெவ்வேறு நகரங்களில் Mi ஹோம் ஸ்டோர்களை துவங்கி வருகிறது. இத்துடன் பல்வேறு இதர விற்பனையாளர்களுடன் இணைந்து சியோமி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.

சமீபத்தில் சியோமி நிறுவனம் Mi எக்சேஞ்ச் எனும் புதிய திட்டத்தை துவங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் Mi ஹோம் ஸ்டோர் சென்று தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை வழங்கி புதிய ஸ்மார்ட்போனினை வாங்க முடியும். கேஷிஃபை குழுவினர் நீங்கள் வழங்கும் ஸ்மார்ட்போனின் தரத்தை கணக்கிடுவர், பின் இந்த தொகை வாடிக்கையாளர் வாங்கும் ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து குறைக்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!