கிறீன் டீயினால் வயிற்று கொழுப்புக்கள் உண்மையில் குறைகின்றதா..? தெரிஞ்சா ஷாக் ஆகியிடுவீங்க..!


கிறீன் டீ உடல் எடையைக் குறைப்பதற்கு சிறப்பாக கைகொடுப்பதை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் அதிகளவில் அறிந்து கொண்டீர்கள். ஆனால் இதனை பயன்படுத்துவது உடலிற்கு நல்லதா? கெடுதலா எனும் சந்தேகம் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது.

ஆனால் கிறீன் டீயில் உள்ள அதிகளவான அண்டிஒக்ஸிடன் மற்றும் கட்டச்சின் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தில் கைகொடுக்கின்றது என்பதே உண்மை. கிறீன் டீ உடலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது? ஒவ்வொருவரும் கிறீன் டீயை எவ்வளவு பயன்படுத்த வேண்டும்? என்பதை இதனைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மையில் கிறீன் டீயினால் உடல் எடை குறைவடைகிறதா?
நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது வெறுமென கிறீன் டீயை மட்டும் தினமும் குடித்து வருவதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து விடும் என நினைத்தால் அது மிகவும் தவறானது. சரியான உணவுப் பழக்கத்துடன் உடற்பயிற்சி செய்யும் போது கிறீன் டீ அருந்துவதனால் உடலில் கரையும் கொழுப்பின் அளவு அதிகமாகும் என்பதே உண்மை.

கிறீன் டீயில் கட்டச்சின் மற்றும் போலொபீனோல் இருப்பதனால் இன்சுலீன் செயற்பாட்டைத் தூண்டுவதுடன் ஈரலின் கலங்களால் கொழுப்பைப் பயன்படுத்தும் அளவை அதிகரிக்கச் செய்கிறது. அது மட்டுமல்லாது கஃபின் இருப்பதனால் உடலில் உள்ள கொழுப்பை ஒக்ஸிஜன் தாக்கத்திற்கு உள்ளாக்கி அதிகளவான கொழுப்பைக் கரைக்கச் செய்கிறது.

கிறீன் டீயைப் பயன்படுத்தும் போது ஆரோக்கிய உணவு பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் பின்பற்றுவது அவசியமானது.


ஒரு நாளிற்கு எவ்வளவு கிறீன் டீ குடிப்பது சிறந்தது?

கிறீன் டீயில் உள்ள அண்டிஒக்ஸிடன் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்ற போதிலும் அதிகளவு எடுத்துக் கொள்வது உடலிற்கு சிறந்தது அல்ல.

தினமும் 2 அல்லது 3 கப் கிறீன் டீ அருந்துவது போதுமானது. 5 கப்பிற்கு அதிகமாக கிறீன் டீ அருந்துவதனால் உடல் நச்சுத் தன்மை அடைவதுடன் ஈரலும் பாதிக்கச் செய்கின்றது.

கிறீன் டீ அருந்தும் போது சீனி, தேன் போன்றவற்றைத் தவிர்த்து வெறுமென சூடான நீரில் கலந்து குடிப்பதே உடல் எடையைக் குறைக்க உதவும்.

கிறீன் டீயை எப்போது அருந்துவது சிறந்தது?
கிறீன் டீ காலையில் வெறு வயிற்றில் அருந்துவது சிறாந்ததல்ல. ஒரு கிளாஸ் நீர் அல்லது எலுமிச்சைப் பானம், தேன் எடுத்துக் கொண்ட பின்பு கிறீன் டீயை அருந்த வேண்டும்.
சாப்பிட்ட உடன் கிறீன் டீ எடுத்துக் கொண்டால் அது சமிபாட்டு பிரச்சினையை ஏற்படுத்தி விடும். அதனால் அதை தவிர்ப்பது சிறந்தது.


கிறீன் டீ அருந்துவதற்கு சிறந்த நேரம் சாப்பிட்டு 50 நிமிடங்களின் பின்னர் அல்லது உடற்பயிற்சிக்கு 30 நிமிடங்களிற்கு முன்பு அருந்த வேண்டும்.

கிறீன் டீயை எடுத்துக் கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

1) இதில் உள்ள அண்டிஒக்ஸிடன் சருமம் வயதடைவதைத் தடுத்து ஆரோக்கியமாகப் பேணும்.
2) மார்பகம், ஆணுறுப்பு மற்றும் குடல் பகுதிகளில் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.
3) மூளையின் கலங்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதன் மூலம் அல்சைமர் மற்றும் பார்கின்க்ஷன் நோய்கள் வராமல் தடுக்கும்.
4) வாய்ப் பகுதியில் உள்ள பக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் பற்களின் ஆரோக்கியத்தைப் பேணுகிறது.
5) கிறீன் டீ அருந்துவதனால் நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும்.
6) உடலிற்கு சக்தியை வழங்கி உடல் ஆரோக்கியத்தைப் பேணுகிறது.
7)
கிறீன் டீயை சரியான அளவில் சரியான நேரத்திற்கு குடிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!