வெளிநாட்டில் பணிபுரியும் தாய்..!! மகள் எடுத்த விபரீத முடிவால் பரபரப்பு..!!


மாரவில பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தன்னை தேட வேண்டாம் என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

கடிதத்தை பார்த்த தந்தை, மாரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மனைவி வெளிநாட்டில் தொழில் செய்து வருகின்ற நிலையில், மகள் இவ்வாறு வீட்டைவிட்டு சென்றுள்ளார்.

குறித்த மாணவி வகுப்பு ஒன்றுக்கு சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த தந்தை அவரை தேடியுள்ளார்.

இதன்போது வீட்டில் கதவுக்கு அருகில், கடிதம் ஒன்று இருப்பதை தந்தை அவதானித்துள்ளார். அந்த கடிதத்தில் தான் வீட்டை விட்டுச் செல்வதாகவும், தன்னை தேட வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், அந்த சிறுமி காதல் தொடர்பு காரணமாக வீட்டை விட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வீட்டை விட்டு சென்ற மாணவியையும், அவரின் காதலனையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.source-tamilwin

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!