நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழ வேண்டுமா..? இந்த இயற்கை உணவுகளை சாப்பிடுங்க..!


நாம் நெடு நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழ வேண்டுமானால் நாம் உண்ணும் உணவுகள் தொடர்பில் அதிக அக்கறை வேண்டும் என்கிறது அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்று.

அதே போல் தினசரி உடற்பயிற்சி, போதுமான உறக்கம் மற்றும் கெட்ட பழக்கவழக்கங்களை தவிர்த்தல் என்பனவும் வாழ்நாளை அதிகரிக்கும் காரணிகளில் ஒன்றாகும்.

எது எப்படியிருப்பினும், நாம் உட்கொள்ளும் உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் எந்தெந்த உணவுகளை நாம் அதிகளவில் உண்ண வேண்டும் என்பது தொடர்பில் இப்போது விரிவாகப் பார்ப்போம்.

01. மீன்
நாம் மீனை உட்கொள்வதால் நோய்த் தொற்று ஏற்படுவது குறைக்கப்படும். அத்துடன் மீனில் உள்ள கெரட்டனொய்ட் எனும் மூலப் பொருள் நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கின்றது. ஒமேகா – 3 அடங்கியுள்ள மீன் வகைகளை உட்கொள்வதன் மூலம் கொடிய நோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும்.

02. கடற் பாசி
கடற்பாசி வகைகளை உட்கொள்வதன் மூலம், அழற்சி ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுவதுடன் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும். மேலும் புற்றுநோய் தோன்றாமலும் கட்டுப்படுத்த முடியும்.


இதில் உள்ள அயடின், மக்னீசியம் மற்றும் போலேட் என்பன இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதோடு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கின்றது. மேலும் சமிபாட்டுத் தொகுதியையும் பாதுகாக்கின்றது.

03. தானியங்கள்
தானியங்களை அதிகளவில் உட்கொள்வதன் மூலம் குறைப் பிரசவம் ஏற்படுவது, புற்றுநோய் மற்றும் இதயநோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

04. விதை வகைகள் மற்றும் கடலை வகைகள்
நாளொன்றுக்கு 20 கிராம் விதைகள் மற்றும் கடலைகள் உட்கொள்வதன் மூலம் இதயநோய் ஏற்படுவது 30 வீதத்தால் குறைக்கப்படுவதாகவும், புற்றுநோயால் பாதிக்கப்படுவது 15 வீதத்தால் குறைக்கப்படுவதாகவும், குறைமாதப் பிரசவம் ஏற்படுவது 22 வீதத்தால் குறைக்கப்படுவதாகவும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆண்டொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!