நானாக இருந்தால் திருப்பி அடித்திருப்பேன்… ரகசியத்தை போட்டுடைத்த பாலாஜியின் நண்பர்…!


திரையில் காமெடியனாக தோன்றி பலரை சிரிக்கவைத்தாலும் அந்த நடிகர்களின் வாழ்க்கையில் பல மனக்கஷ்டங்கள் இருக்க தான் செய்யும். அதிலும் சில காமெடி நடிகர்கள் மிகவும் கோபக்காரர்களாக கூட இருப்பார்கள்.

சென்ற முறை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த வையாபுரி கூட தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த தான் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததாக தெரிவித்திருந்தார். அதே போல இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் பாலாஜிக்கும் அதே கோபம் தான் பிரச்சனை.

இந்த உச்ச கட்ட கோபத்தினால் அவர் செய்த பல விஷயங்கள் அவரின் வாழ்க்கையையே இன்று புரட்டி போட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அவருடன் சக போட்டியாளராக மட்டுமே கலந்து கொண்ட அவரது மனைவி நித்யா கூட இதை தான் கூறி இருந்தார்.

கடைசிவரை பாலாஜியுடன் சேரப்போவதே இல்லை . அவரது குணம் எனக்கு நன்றாக தெரியும் என பேசிய நித்யா சமீபகாலமாக அவரிடம் காணப்படும் மாற்றங்களை கண்டு மீண்டு பாலாஜியுடன் சேரலாம் எனும் எண்ணத்திற்கு இப்போது தான் வந்திருக்கிறார்.

பாலாஜியை நன்கு அறிந்த அனைவருக்குமே அவரின் இந்த கோபம் குறித்து நன்றாகதெரியும் இதில் அவரது நண்பரான சேதுவும் ஒருவர்.

இந்த இருவருமே ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்திருக்கின்றனர். பாலாஜி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றின் போது மனம் திறந்த சேது , அவர் ரொம்ப நல்லவர். உதவும் மனப்பான்மை கொண்டவர். அவரோட ஒரே பிரச்சனை கோபம் மட்டும் தான்.

தூத்துக்குடி பிரச்சனையின் போது கூட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார், மனதில் எந்த விஷயத்தையும் வைத்திருக்க தெரியாது . மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர்.ஐஸ்வர்யா குப்பையை கொட்டிய போது அவர் எப்படி சகித்து கொண்டார் என எனக்கு தெரியவில்லை. நானாக இருந்தால் கண்டிப்பாக திருப்பி அடித்திருப்பேன். ஆனா அவர் இப்போ ரொம்பவே மாறிட்டார் . என கூறி இருக்கிறார்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!