தினமும் 15 நிமிடங்கள் நடக்கின்றீர்களா..? கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்…!


தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது என்பது உளம், உடல், மற்றும் உணர்வுகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது என்பது அணைவரும் நன்கறிந்ததே. உடற்பயிற்சியை குறைந்தளவேனும் தினமும் செய்வதையே அணைவரும் பரிந்துரைக்கின்றனர்.

தினமும் குறைந்தது 15 நிமிடங்களேனும் நடப்பதனால் ஆயுட்காலத்தில் 7 வருடங்கள் அதிக்கரிக்கும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை. நீங்கள் தினமும் காலை நேரத்திலோ அல்லது மதிய உணாவு இடைவெளிகளிலோ, இரவு நேர உணவின் பின்னரோ 15 நிமிடங்கள் நடப்பதனால் உடல் உள ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஆயுட் காலமும் அதிகரிக்கும்.

இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் நடத்தலிற்கும் என்ன தொடர்பு?

இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் நடத்தலிற்கும் தொடர்பு உள்ளதா என வினாவினால் ஆம் என்பதே பதிலாக உள்ளது.
• வாரத்திற்கு 9 மைல் தூர நடப்பதனால் 22% இறப்பு விகிதம் குறைவடைகிறது.
• தினமும் 30 நிமிடங்கள் நடப்பதனால் இரத்த நாடிகளில் கொழுப்பு படிவதை 18% குறைக்க முடியும்.
• வாரத்திற்கும் மூன்று மணி நேரம் நடப்பதனால் 35% மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும், 34% பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புக்களும் குறைவடையும்.

தினமும் நடப்பதனால் உடலின் ஆரோக்கியம் மேம்படுமா?

1. சிறந்த மனநிலையை உருவாக்கும்.
தினந்தோறும் நடப்பதனால் மன ஆரோக்கியம் பேணப்படுவதுடன் சிறந்த மன நிலையை உருவாக்குகிறது. 12 நிமிடங்களாவது நடப்பதனால் கவனிப்புத் தன்மையும், தன்நம்பிக்கையும் அதிகரிக்கும் என்பதே உண்மை.

2. அறிவாற்றல் அதிகரிக்கும்.
சிறியவர்களுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் நடப்பதனால் அறிவாற்றல் அதிகரிக்கிறது.

3. இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
சீரான நடையினால் உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவடைகின்றது.


4. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் வராமல் தடுப்பதற்கும் உதவும்.
தினமும் 30 நிமிடங்கள் நடப்பதனால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் 30% குறைவடைவதுடன், நீரிழிவு நோய்க்கு காரணங்களில் ஒன்றான வயிற்றுப் பகுதியில் அதிகம் கொழுப்பு படிவதைத் தடுக்கின்றது.

5. புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும்.
வாரத்திர்ற்கு 7 மணி நேரம் நடப்பதனால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் 14% உம், 3 மணி நேரம் நடப்பதனால் ஆண்மைச் சுரப்பியிம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களும் குறைவடைகிறது.

6. வலிகளைக் குறைக்கும்.
நரபு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு வலிகளைக் குறைப்பத்உடன் இலகுவாக உடல் அசைவுகளை மேற் கொள்ளவும் முடிகிறது.

நடத்தலின் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்.
• நடக்கும் போது கைகளை வீசி நடப்பதுடன் தோல்பட்டைகளிற்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.
• நடக்கும் போது கால்களிற்கு வலிகளை ஏற்படுத்தாத இதமான எடை குறைந்த பாதணிகளை அணிவது அவசியம்.
• நடக்கும் போது நேராக நிமிர்ந்து நடத்தல் அவசியமானது.
• ஒரு மணித்தியாலத்திற்கு 3 ½ மைல் என்ற வேகத்தில் நடப்பது சிறந்தது.
மலைப் பாதைகளில் நடத்தல், படிக் கட்டுகளில் இறங்குதல் போன்றனவும் சிறந்ததே. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!