நாட்பட்ட வலிகளால் அவதியா..? கவலை வேண்டாம் – இந்த பயிற்சிகளை செய்தாலே போதும்..!


எம்மில் சிலருக்கு உடம்பில் பல பகுதிகளில் நாட்கணக்காக வலிகள் இருக்கும். எனினும், அதனை போக்கிக் கொள்வதென்பது கடினமாகவே தான் தோன்றும்.

ஆனால், இந்த வலிகளை சில பயிற்சிகள் மூலம் போக்கிக் கொள்ளலாம். அவை என்ன, எவ்வாறு போக்கிக் கொள்வது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

01. கார்டியோ பயிற்சிகள்
இந்த பயிற்சியானது உடல் மற்றும் உளவிருத்திக்கு உதவி புரியும்.

– நடை பயிற்சி
தினமும் 30 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்வது உடலுக்குச் சிறந்தது. ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக ஆரம்பித்து நாளடைவில் வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

– நீச்சல் பயிற்சி மற்றும் வாட்டர் அரோபிக்ஸ்
நடைபயிற்சி செய்வதில் சிரமத்தை எதிர் நோக்குபவர்கள் அல்லது நடைபயிற்சி செய்ய முடியாதவர்கள் இந்த நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

02. ரிலேக்சேஷன் பயிற்சிகள்

– மூச்சுப் பயிற்சி

செய்முறை

1. தரையில் அல்லது கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள்.

2. கைகளை வயிற்றில் வைத்துக் கொள்ளுங்கள்.

3. கண்களை மூடிக் கொண்டு மூக்கால் உட்சுவாசித்து வாயால் மூச்சை வெளியேவிடுங்கள்.

இந்த முறையில் தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்தல் வேண்டும். இதனை மேற்கொள்ளும் போது உடம்பில் உள்ள வலி அகன்று விடுவதைப் போல் கற்பனை செய்ய வேண்டும். நித்திரைக்குச் செல்லும் முன்னர் அல்லது நேரம் உள்ள போது இவ்வாறு செய்வது உத்தமம்.


03. ஸ்ரெச்சிங் பயிற்சிகள்

செய்முறை

1. தரையில் படுத்துக் கொள்ளவும்

2. முழங்கால்களை மார்பு வரை மடக்கி கைகளால் கால்களைச் சுற்றி பிடித்துக் கொள்ளவும்.

3. இடது மற்றும் வலது புறமாக இந்த நிலையில் இருந்தபடியே அசையவும்.

4. இவ்வாறு செய்யும் போது கால்களை குறுக்காக வைக்க முயற்சிக்கவும்.

5. எழும்பி நிற்கவும் அல்லது கதவில் சாய்ந்து உட்காரவும்

6. பின்னர், நீங்கள் உள்ள நிலையிலிருந்தபடியே கைகளை தோல்களுக்கு மேல் உயர்த்தவும்.
7. பின்னர் கைகளை கீழே தளர்த்தவும்.

8. தலையை ஒரு புறமாக திருப்பி பின்னர் கீழே பார்க்கவும்

9. ஒரு கையை தலையின் மேற்புறத்தில் வைத்து அழுத்தம் கொடுக்கவும்.

04. ஸ்ரெந்தனிங் பயிற்சிகள்

செய்முறை

1. தரையில் படுத்து கைகளை கூரையை நோக்கி நேராக உயர்த்தவும்.

2. பின்னர் கால்களை உயர்த்தி முழங்கால்களை 90 டிகிரி அளவிற்கு மடக்கவும்.

3. மூச்சை வெளியே விட்டபடி, இடது காலை தரையில் படாதவாறு இறக்கவும். இதே சமயம் வலது கையை தலைக்கு நேராக உயர்த்தவும். இதை ஒரு செக்கனுக்கு செய்து பின்னர் வழமையான நிலைக்கு திரும்பவும்.

4. இதே போன்று மறுபுறமும் செய்யவும். ஒவ்வொரு பக்கமும் 10 தடவைகள் செய்யவும்.

5. பின்னர் நான்காக மடிந்து உட்காரவும்.

6. சிறிது நேரத்தில் தரையில் படுத்துக் கொண்டு இடுப்புப் பகுதியை மேலே உயர்த்தவும். இதன் போது கைகள் பின்புறத்தில் இருத்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம், நாட்பட்ட வலிகளில் இருந்து படிப்படியாக விடுதலையடையலாம். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!