நாம் குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் எது தெரியுமா..? இத முதல்ல படிங்க..!


நாம் சுகாதாரமாக வாழ வேண்டுமானால் அதற்கு உணவு மற்றும் நீர் என்பது மிக அவசியம் என்பது எம் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். தண்ணீர் அருந்துவது எமது உடலில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றது. எமது உடல் சோர்வடையாது இருக்க வேண்டுமாயின் தண்ணீர் அருந்துவது மிகமிக அவசியம்.

ஆனால், எவ்வகையான தண்ணீரை நாம் அருந்த வேண்டும் என்பது பற்றி பலர் அறிந்திருப்பதில்லை. சுத்திகரிக்கப்பட்டதண்ணீர், கொதிக்க வைத்து பெறப்பட்ட தண்ணீர் அல்லது சாதாரணமாக கிடைக்கப் பெறும் தண்ணீர் ஆகியவற்றில் எது சிறந்தது என்பதே தற்போதைய கேள்வியாகவுள்ளது.

01. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்
தண்ணீரில் கலந்துள்ள இரசாயனங்களை சுத்திகரித்து பெறப்படும் தண்ணீரே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டு பெறப்படும் தண்ணீரில் உள்ள பக்டீரியா, பங்கஸ், தண்ணீரில் வாழும் நுண்ணுயிர்கள், இரசாயனங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் என்பன அகற்றப்படுகின்றன.

இருப்பினும், தண்ணீரை சுத்திகரிக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் ப்ளூரொய்ட் காரணமாக குழந்தகளின் பற்சுகாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் மனித உடலில் அதிகளவு ப்ளூரொய்ட் சேரும் பட்சத்தில் அது மூளையைப் பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. கொதிக்க வைத்து பெறப்படும் தண்ணீர்
சுத்திகரிக்கப்பட்டு பெறப்படும் தண்ணீரைப் போலவே தான் கொதிக்க வைத்து பெறப்படும் தண்ணீரும். கொதிக்க வைக்கும் போது, அதிலுள்ள பக்டீரியா, வைரஸ்கள் மற்றும் சல்பேற் போன்றவை அகற்றப்படுகின்றது. சுத்திகரிக்கப்பட்டு பெறப்படும் தண்ணீரின் ஒருவகை தான் கொதிக்க வைத்து பெறப்படும் தண்ணீர் எனவும் குறிப்பிடலாம்.


தண்ணீரைக் கொதிக்க வைப்பதன் மூலம் அதிலுள்ள அனைத்து விதமான தாதுப்பொருட்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் துல்லியமாக அகற்றப்படுகின்றது.
எனினும், இந்த செயற்பாட்டின் போது தண்ணீரில் உள்ள கனியுப்புக்கள் மற்றும் விட்டமின்களும் அழிக்கப்படுவதால் கொதிக்க வைத்து பெறப்படும் தண்ணீரில் எவ்வித சத்துக்களும் இல்லை என்று தான் குறிப்பிட வேண்டும்.

03. சாதாரணமாக பெறப்படும் குழாய் தண்ணீர்
நாம் வசிக்கும் பகுதி மற்றும் எமது நாட்டில் அமுலில் உள்ள சுகாதார சட்டதிட்டங்களின் அடிப்படையில் பெறப்படும் குழாய் தண்ணீரானது விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்களை கொண்டதாக அமைந்துள்ள போதிலும், அவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மூலக் கூறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் இந்த சட்டதிட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடும்.

இந்நிலையில், வீட்டிலேயே சுத்திகரிக்கக் கூடிய அமைப்பின் மூலம் பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை சிறந்ததாகக் கொள்ள முடியும். வீடுகளில் சுத்திகரிக்கப்படும் தண்ணீரில் ப்ளூரொய்ட் அளவு குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஒப்பீட்டளவில் சுத்திரிக்கப்பட்ட தண்ணீரானது பாதுகாப்பானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதோடு குழாய் தண்ணீரில் காணப்படும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மூலம் பொருட்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே வீட்டிலேயே சுத்திகரித்துப் பெறப்படும் தண்ணீரை தினமும் பருகுவதால் உடலுக்கு நன்மைகள் கிட்டும் என்பதை நினைவில் கொள்வோம். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!