சமைக்கும் போது விஷமாக மாறும் 10 உணவுகள்… உஷாராவே இருங்க..!


உணவுகளை சமைக்கும் போது மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவது முக்கியமானது. சமையலில் ஏற்படும் சிறு தவறுகளும் உணவின் தன்மையை மாற்றுகின்றது.

உணவை அதிக நேரம் சமைப்பதனாலும், தவறான முறைகளில் சமைப்பதனாலும் இவை நச்சுப் பதார்த்தங்களாக மாறி விடுகின்றன.

இவற்றை உண்பதனால் உடல் நிலை பாதிப்படைகின்றது. உணவுகளை மீண்டும் மீண்டும் சூடாக்குதல், சமைத்த பல மணி நேரம் வைத்திருப்பதனாலும் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது.

சமைக்கும் போது பாதிப்படையும் உணவுகளை பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமானது. இத்தகைய உணவுகள் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பு உணவுகளை பற்றி தெரிந்து கொண்டு கையாள்வது அவசியமானது.
சமைக்கும் போது விக்ஷமாக மாறும் 10 வகையான உணவுகள்.

1. அரிசி.

அரிசியை சமைத்த பின்பு ஆற வைப்பதற்காக அறை வெப்பநிலையில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் பக்டீரியாக்கள் உருவாகின்றன.

இவை வயிற்று வலி போன்ற பல கோளாறுகளை ஏற்படுத்தும். அரிசியை சமைத்தவுடன் காற்று உட்புகாத பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும்.

2. சமையல் எண்ணெய்.

நாம் அணைவரும் செய்யும் மிகப் பெரும் தவறு சமைத்த எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சமையலுக்காக பயன்படுத்துவது.

இதனால் எண்ணெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைவடைவதுடன் அதன் தன்மை மாறுவதுடன் சமிபாட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

3. உருளைக்கிழங்கு.

அரிசியை போன்று உருளைக்கிழங்கும் சமைத்த பின்பு வெளியே வைத்திருப்பதனால் பக்டீரியாக்கள் உருவாகின்றன. அத்துடன் மீண்டும் இதனை சூடுபடுத்தி சாப்பிடுவதனால் உடலிற்கு தீங்கை விளைவிக்கிறது.


4. வாட்டிய ரொட்டி.

வாட்டிய ரொட்டித் துண்டுகளை சாப்பிடுவதனால் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. ரொட்டிகளை வாட்டும் போது acrylamide எனும் நச்சுப் பொருட்கள் வெளியேறுகின்றன.
இவை வயிற்றுக் கோளாறுகளையும், சமிபாட்டு பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது.

5. மைக்ரோவேவ் பொப்கோர்ன்

நீங்கள் மைக்ரோவேவில் பொப்கோர்ன் செய்து சாப்பிடுபவர்களாக இருந்தால், உடனடியாக அதனை தவிர்க்கவும்.

ஏனெனில் Perfluorooctanoic அமிலம் இதில் காணப்படுவதனால் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் போன்ற நோய்களை வரச் செய்கின்றது.

6. நைட்ரேட்டிவ் காய் வகைகள்.

நைட்ரேட்டிவ் பொருட்கள் அதிகமுள்ள செலரி, கீரை, பீற்றூட் சூடாக்கும் போது நச்சுத் தன்மை அடைகின்றது. இதனை மீண்டும் மீண்டும் சூடாக்கும் போது புற்றுநோய்களும் வரும் ஆபத்துள்ளது.

7. கோழி இறைச்சி.

கோழி இறைச்சி குளிரூட்டியில் வைப்பதனால் அதில் உள்ள புரோட்டினில் மாற்றமடையும். இதனை இரண்டாம் முறை சூடாக்குவதனால் சமிபாட்டு பிரச்சினைகளையும், ஆரோக்கியத்தில் பல கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

8. காளான்.

காளான் சமைத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட்ய்வதே சிறந்தது. காளானை வெட்டிய பின்பு அதில் மாற்றங்கள் அடைய ஆரம்பிக்கும். இதனால் வயிற்றுக் கோளாறுகள் பாதிப்படைய நேரிடும்.

9. இறால்.

இறால் உயிரற்ற நிலையில் அதில் சில வகையான பக்டீரியாவும் நச்சுப் பொருட்களும் உருவாக ஆரம்பிக்கின்றன.

எனவே இறாலை சமைக்க முன்பு நீரில் நன்றாக அவிக்கவும் இல்லையெனில் சமிபாடு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.

10. முட்டை.

அவித்த முட்டையை நீண்ட நேரம் வெளியில் வைத்திருப்பதனால் அதில் நுண்ணங்கிகள் வளரும் ஆபத்துள்ளன.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!