பிக்பாஸ் வீட்டில் நடிகர் சிம்புவுக்காக மற்றொரு நடிகரை அசிங்கப்படுத்திய மஹத்…!


நடிகர் மஹத் தற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் நேற்று பிக்பாஸ் கொடுத்த டாஸ்குக்காக வீட்டில் நடனமாடவிருந்தார்.

அப்போது ,மற்றவர்கள் தனுஷின் படத்தில் வந்த ஒத்த சொல்லால பாடலுக்கு ஆட சொல்லி கேட்டனர். அதற்கு மஹத் “நான் ஆடமாட்டேன்” என இரண்டு முறை கராறாக கூறினார். அது அவரின் கொள்கையாம்.

மஹத் சிம்புவின் நண்பர் என்பது தெரியும். சிம்பு-தனுஷ் இடையே பிரச்சனை என பல வருடங்களாக சினிமா துறையில் பேச்சு உள்ள நிலையில் தற்போது மஹத் அதற்காகத்தான் தனுஷ் பாடலுக்கு ஆடமுடியாது என கூறியுள்ளார்.

அதன் பிறகு அவர் சிம்பு பட பாடல்களுக்கு தான் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: cineulagam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!