வயிற்று புற்றுநோய் என்றால் என்ன? அறிகுறிகள் எப்படி தென்படும் தெரியுமா..?


இதுவரை நுரையீரல், மார்பகம் போன்ற புற்றுநோய்களின் அறிகுறிகளைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.. இப்போது வயிற்று புற்றுநோய் பற்றிய முன் எச்சரிக்கையான பதிவு தான் இது,

புற்றுநோய்களிலேயே வயிற்றுப் புற்றுநோய் மிகவும் வலிமிக்கதாக இருக்கும். ஆனால் வயிற்று புற்றுநோய்க்கு வயிற்று வலி மட்டுமே அறிகுறி அல்ல.

அதையும் தாண்டி, நாம் சாதாரணமாக நினைக்கும் சில பிரச்சனைகளும் அறிகுறிகளாகும்.


சரி, இப்போது வயிற்று புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.


ஒருவர் மலம் கழிக்கும் போது, இரத்தம் கலந்து வந்தாலோ அல்லது இரத்த வாந்தி எடுத்தாலோ, சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பசியின்மையும் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்றாகும். அதிலும் அதிகம் எதுவும் சாப்பிடாமலேயே வயிறு நிறைந்துவிட்டால், அதை சாதாரணமாக நினைத்துவிடாமல் மருத்துவரை உடனே அணுகுங்கள்.


வயிற்று வலியும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே அடிக்கடி கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டால், அது வயிற்று புற்றுநோயினால் கூட இருக்கலாம்.

எந்த ஒரு டயட்டிலும் இல்லாமல், உடல் எடை குறைந்தால், அதை சாதாரணமாக விடாதீர்கள். திடீர் உடல் எடை குறைவு, வயிற்று புற்றுநோயின் ஓர் அறிகுறிகளுள் ஒன்றாகும்.

வயிற்றில் புற்றுநோய் செல்கள் வளர்வதாக இருந்தால், வயிறு உப்புசமாகவும், குடலியக்கத்தில் இடையூறு ஏற்பட்டு மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!