ஆண்கள் மூக்கில் உள்ள முடியை ஏன் நீக்கக்கூடாது தெரியுமா..?


அழகு சார்ந்த விஷயங்களில் அக்கறை காட்டுவது சரிதான். ஆனாலும் அதைவிட, ஆரோக்கிய விஷயத்தில் சற்று கூடுதலாகவே நாம் அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது. அதில் ஆண்களைப் பொருத்தவரையில் மிக முக்கயமான ஒன்று ஷேவ் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியம் பற்றியது.


கிளீன் ஷேவ் செய்வதை விட, முடியை மட்டும் ட்ரிம் செய்வதே ஆரோக்கியமான விஷயம். தாடியில் நல்ல நுண்ணுயிரிகள் வளர்கின்றன என்று ஆய்வில் கண்டிறியப்பட்டது.

அதேபோல் தான், மூக்கின் உள்பகுதியில் வளரும் முடியை ஷேவ் செய்யக்கூடாது. அப்படி செய்யும்போது, சில நோய்க்கிருமிகள் உங்களைத் தாக்கும் என்கிறார்கள்.
மூக்கின் முடியானது பாக்டீரியாக்களின் தாக்கம் உண்டாகாமல் காக்கிறது.


மூக்கினுள் முடி வளர்வது சற்று அசௌகரியமாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் பாதுகாப்பு என்றால் விட்டுவிடுவது தானே நல்லது. மூக்குப்பகுதியானது ட்ரை ஆங்கிள் ஆப்டெத் என்று அழைக்கப்படுகிறது.


மூக்கு நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பு. அதன்வழியே உண்டாகும் நோய்த்தொற்று மிகவும் ஆபத்து வாய்ந்தது. மூக்கிலிருக்கும் முடிகளை அகற்றிவிட்டால், மிக எளிதாக நோய்க்கிருமிகள் உள்ளே சென்றுவிடும்.


மூக்கினுள்ளே வளரும் முடியை ஆங்கிலத்தில் cilia என்று குறிப்பிடுவார்கள். இது பாக்டீரியா தொற்றுகள் ஏதும் மூக்கின் வழியே உள்ளே செல்லாமல் பார்த்துக் கொள்ளும்.

ஒருவேளை அப்படி மூக்கினுள் முடி வளர்வது அசௌகரியமாக இருந்தால், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதை ட்ரிம் செய்து கொள்ளலாம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!