உடல் வறட்சியை போக்கும் தர்ப்பூசணியில் இவ்வளவு நன்மையா…?


வெயில் காலத்தில் அதிகம் விரும்பி உண்ணும் பழங்களில் தர்ப்பூசனியும் ஒன்று.

வெயில் காலத்தில் ஏற்படும் அதிகளவான உடல் வறட்சியை தர்ப்பூசனி இலகுவாக நிவர்த்தி செய்து விடுகின்றது.

தர்ப்பூசனியில் உள்ள நீர்ச் சத்துக்கள் மற்றும் பல மருத்துவ குணங்களால் தினமும் இதனை உட்கொள்ளவது சிறந்தது.

தர்ப்பூசனி சாப்பிடுவதால் உடலிற்கு ஏற்படும் நன்மைகள்

1. இதயத்தை பாதுகாக்கும்.

தினமும் தர்ப்பூசனி சாப்பிடுவதால் இதில் உள்ள லைகோபேன் இதயத்தின் செயற்பாட்டு அளவை அதிகரிக்கச் செய்கின்றது.

அத்துடன் பொட்டாசியம் கொழுப்பைக் குறைத்து இதயத் துடிப்பைச் சீராக்குகின்றது. இதனால் மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் இதயத்தைப் பாதுகாக்கின்றது.

2. எலும்பை வலிமைப்படுத்தும்

லைகோபேன் எலும்பு உக்குவதைத் தடுத்து அதன் உறுதியைப் பேணுகின்றது. பொட்டாசியம் எலும்பு மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியத்திற்கு கை கொடுக்கின்றது.

3. உடலைப் பாதுகாத்தல்

தர்ப்பூசனியில் உள்ள விட்டமின் சி உடலை தொற்றுக்களில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது.

4. உடல் எடையைக் குறைக்கும்

இதில் உள்ள 90% நீர்ச்சத்தும், குறைந்த கலோரியும் உடல் எடையை இலகுவாக குறைத்து விடுகின்றது.

5. வீக்கத்தைக் குறைக்கும்

தர்ப்பூசனியில் செறிந்துள்ள flavonoid, carotenoid, triterpenoid வீக்கங்களிற்கு எதிராகச் செயற்படுகின்றது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!