மலச்சிக்கலா..? 3 வாரங்களில் குடலைச் சுத்தம் செய்வது எப்படி?


சமிபாட்டுத் தொகுதி சிறப்பாகச் செயற்படுவதன் மூலம் நம் உடலிற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியத்தை பேண முடிகின்றது.

சமிபாட்டிற்கு பின்பு உணவுக்கழிவுகள் தகுந்த முறையில் வெளியேறாமல் குடலில் சேர்ந்து விட்டால் உடல் நச்சுத் தன்மை அடைந்து விடும், வீக்கம், வலி, பசியின்மை, தொற்றுக்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மலச்சிக்கல் ஏற்படும் போது எனிமா மற்றும் மருந்து வகைகளைப் பயன்படுத்துவதால் பூரணமான தீர்வைப் பெற முடிவதில்லை.

அத்துடன் எனிமா பயன்படுத்துவதால் கழிவுடன் சேர்த்து உடலிற்குத் தேவையான நல்ல நுண்ணங்கிகளையும் நீக்கி விடும்.

ஆனால் இயற்கை முறையில் ஆளி விதை மற்றும் மோர் பயன்படுத்தி 3 வாரங்களில் குடலைச் சுத்தப் படுத்த முடியும்.

குடலைச் சுத்தப்படுத்துவதற்கான தீர்வு.


முதல் வாரம்.

ஒரு மேசைக்கரண்டி ஆளி விதை மாவுடன் 100ml மோர் சேர்த்து உட்கொள்ளவும்.

இரண்டாம் வாரம்.

இரண்டு மேசைக்கரண்டி ஆளி விதை மாவுடன் 100ml மோர் சேர்த்து உட்கொள்ளவும்.

மூன்றாம் வாரம்.

மூன்று மேசைக்கரண்டி ஆளிவிதை மாவுடன் 150ml மோர் சேர்த்து உட்கொள்ளவும்.

இந்த இலகுவான முறையை பின்பற்றினால் குடலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற முடியும். அத்துடன் பல நாட்களிற்கு குடலில் கழிவு தேங்காமல் பாதுகாக்கின்றது.

இந்த முறையினால் நம் உடலிற்கு தேவையான நுண்ணங்கியை இழப்பதை தவிர்க்க முடியும்.


பயன்படுத்தும் முறை

காலையில் ஒரு டம்ளர் நீர் அல்லது எலுமிச்சப்பழ் நீரை அருந்திய பின் இந்த பானத்தை குடிக்கவும். அதன்பின்பே காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மூன்று வாரத்தில் 2 லீட்டர்க்கு அதிகமாக நீரை அருந்துவதால் மேலும் பயனளிக்கும்.

இந்த முறையை வருடத்திற்கு இரு தடவைகள் செய்வதனால் குடலில் கழிவுகள் தேங்காது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!