கோடை வெயிலும் ஆரம்பித்து விட்டது… வீட்டிலேயே ஐஸ் கிரீம் செய்வது எப்படி..?


குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஐஸ் கிரீம் செய்து கொடுத்து அவர்களின் கோடை விடுமுறையை அசத்தலாக்கலாம்.

கோடை வெயிலும் ஆரம்பித்துவிட்டது. கோடை விடுமுறையும் ஆரம்பித்துவிட்டது. வீட்டிலிருக்கும் குழந்தைகள் ஏதாவது கேட்டு அடம்பிடித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு வித்தியாசமாக ஏதாவது சமைத்துக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கு இதோ… வீட்டிலேயே எளிதாக ஐஸ் கிரீம் செய்யும் ரெசிப்பி.

கேரமலைஸ்டு சாக்லேட் பனானா ஐஸ் கிரீம்

தேவையான பொருட்கள்:
சர்க்கரை – ½ கப்
துண்டுகளாக வெட்டப்பட்ட வாழைப்பழம் – 4
வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் – 1 தேக்கரண்டி
விப்பிங் கிரீம் – 500 மி.லி
சாக்லேட் சில்லுகள் – ½ கப்


செய்முறை:

ஒரு வானலியில் சர்க்கரையை தூவி, மிதமான சூட்டில் உருகவிடவும். உருகிய பின், வெட்டிய வாழைப்பழங்களை சேர்த்து, வாழைப்பழம் மெழுகு பதத்திற்கு வரும்வரை நன்கு கிளரவும்.

ஒரு பாத்திரத்தில், விப்பிங் கிரீம், வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்த்து மாவுபோல் பிசையவும். இதில், வாழைப்பழம் கலவையை சேர்க்கவும்.

அதில் சாக்லேட் சில்லுகளை கொட்டி, அதனை பிரிட்ஜில் 4 மணி நேரம் வைக்கவும்.

சுவையான கேரமலைஸ்டு சாக்லேட் பனானா ஐஸ் கிரீம் தயார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!