தினமும் இந்த உணவு முறையை கடை பிடித்தால் உடல் எடையே அதிகரிக்காது..!


உடற்பருமன் அதிகரித்தல் என்பது இளவயதினர் மாத்திரமின்றி சிறுவர்களாலும் எதிர் கொள்ளப்படும் பிரச்சினை ஆகும். இந்த உடற்பருமனை சரியான உணவு முறைமையை கடைபிடிப்பதன் மூலம் சிறப்பாக குறைக்கலாம். அத்துடன் உடற்பருமன் மேன்மேலும் அதிகரிக்காத வண்ணமும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உடற்பருமனைக் குறைப்பதற்கான உணவு முறை பற்றி நாம் இப்போது நோக்குவோம்!

உணவு முறை
உணவு பரிமாறும் அளவு தனிநபர்களின் வயது உயரம், நிறை மற்றும் அவரது உடலின் இயங்கு நிலைச் செயற்பாட்டின் அளவு என்பவற்றுக்கு ஏற்ப வேறுபடும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

ஒரு கோப்பை என்பது 125 மீல்லி லீற்றர் அளவுப்பரிமாணம் உடையது. மரக்கறி உணவு தேங்காய் பாலின் பயன்பாடு இன்றி சமைக்கப்பட வேண்டும். மாப்பொருள் அற்ற மரக்கறிகள் குறிப்பாக கிழங்கு, பலா, வற்றாளைக் கிழங்கு மற்றும் ஈரப்பலா தவிர்ந்தவையாக இருத்தல் வேண்டும்.


01. காலை 7.30 மணி – காலை உணவு
– ஒரு கோப்பை கொழுப்பற்ற பால் (தேநீர்)
– சோறு ஒரு கோப்பை (சிவப்பு, குத்தரிசி)
– இரண்டு கோப்பை மாப்பொருளற்ற மரக்கறி
– ஒரு துண்டு மீன்அல்லது இறைச்சி (ஒரு சீட்டுக் கட்டின்அளவு)
– சைவ உணவு எனில் அரை கோப்பை பருப்பு அல்லது சோயா அல்லது பயறு. கடலை ஒரு அரை கோப்பை வெங்காய மிளகாய் சம்பலுடன் உண்ணலாம்.

02. காலை 10.30 மணி- சிற்றுணவு
– ஒரு கோப்பை பழங்கள் அல்லது சிறிய வாழைப்பழம்

03. நண்பகல் 12.30 மணி – மதிய உணவு
– ஒரு கோப்பை சோறு (சிவப்புகுத்தரிசி)
– மூன்று கோப்பை மாப்பொருளற்ற மரக்கறி
– ஒன்று தொடக்கம் இரண்டு துண்டு மீன் அல்லது இறைச்சி (சீட்டுக்கட்டின் அளவு)
– சைவ உணவு எனில் அரைக்கோப்பைப் பருப்பு அல்லது சோயா


04. மாலை 4 மணி – சிற்றுணவு
– ஒரு கோப்பை கொழுப்பகற்றிய பால் (மாலை நேரத் தேநீர்)
– ஒரு கோப்பை பழங்கள் அல்லது 2 சீனியற்ற பிஸ்கட்

05. மாலை 7 மணி – இரவு உணவு
– மூன்று தொடக்கம் ஐந்து சிவப்பு இடியப்பம்
– இரண்டு கோப்பை மாப்பொருளற்ற மரக்கறி
– அரை கோப்பை பருப்பு அல்லது ஒரு கோப்பைச் சோறு (சிவப்பு அல்லது குத்தரிசி)
– இரண்டு கோப்பை மாப்பொருளற்ற மரக்கறி
– ஒன்று தொடக்கம் இரண்டு துண்டு மீன் அல்லது இறைச்சி (சீட்டுக்கட்டின் அளவு)
– சைவ உணவு – அரை கோப்பைப் பருப்பு அல்லது சோயா

06. மாலை 9.30 மணி – பின்னிரவு சிற்றுணவு
– ஒரு கோப்பை கொழுப்பகற்றப்பட்ட பால் அல்லது இரண்டு சீனியற்ற பிஸ்கட்
– © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!